Wednesday, April 24, 2013

இலங்கையில் தனி தமிழீழ அரசொன்றை ஏற்படுத்த உலக பயங்கரவாதம் செயற்பட்டு வரும் சந்தர்ப்பத்தில், அதனை அச்சமின்றி எதிர்நோக்க கூடிய வலுவான தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ: எஸ்.எம். சந்திரசேன!

Wednesday, April 24, 2013
இலங்கை::இலங்கையில் தனி தமிழீழ அரசொன்றை ஏற்படுத்த உலக பயங்கரவாதம் செயற்பட்டு வரும் சந்தர்ப்பத்தில், அதனை அச்சமின்றி எதிர்நோக்க கூடிய வலுவான தலைவர் ஒருவர் நாட்டிற்கு இருப்பதாக பொருளாதார அபிவிவிருத்தி பிரதியமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
 
இவ்வாறான அச்சுறுத்தலை எதிர்நோக்கி வரும் நாடொன்றில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறையை ஒழித்து விட்டு, அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை கொண்டு வரும் அவசியமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
 
அனுராதபுரம் குருந்தன்குளம் பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார். 
ஜனாதிபதியை பதவியில் இருந்து அகற்ற முடியாது என்பதை புரிந்து கொண்ட ஜே.சி. வெலியமுன உள்ளிட்ட குழுவினர் தற்போது அரசியல் அமைப்புத் திருத்தம் குறிததும் பொதுவேட்பாளரை நிறுத்துவ பற்றியும பேசி மக்களை தவறாக வழி நடத்தி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கவும் மக்கள் சார்பான அரசாங்கத்தை வீழ்த்தவும் முடியாத பயனளிக்காத முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
 
ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தை தேவையற்ற வகையில் பயன்படுத்துவதில்லை.  அவர் போரை முடிவுக்கு கொண்டு வருதற்கு மாத்திரமே நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தினார். ஏனைய அனைத்து விடயங்கள் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் திருத்தம் ஒன்றை கொண்டு வந்து நாடாளுமன்றத்திற்கு பதில் கூறும் ஜனாதிபதி என்ற வகையில் செயற்படுவதன் காரணமாக ஜனாதிபதி, மூன்று மாதத்திற்கு ஒரு முறை நாடாளுமன்றத்திற்கு வருவதாகவும் எஸ்.எம். சந்திரசேன கூறியுள்ளார். 

No comments:

Post a Comment