Wednesday, April 24, 2013

மகா சிங்கள பௌத்தர்கள் என கூறிக்கொள்ளும் ஒரு பிரிவினர் நாட்டில் உருவாகியுள்ளனர் - சந்திரிக்கா குமாரதுங்க!

Wednesday, April 24, 2013
இலங்கை::அடிப்படைவாதப் பிரிவினரால் பௌத்த தர்மம் மாத்திரமன்றி நாட்டின் பொருளாதாரம் மற்றும் சர்வதேச நற்பெயர் ஆகியனவும் அழிவடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார்.

மத்துகம - படமுல்லகந்த விஹாரையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைக் கூறினார்.
மத்துகம - படமுல்லகந்த விஹாரையின் 135 அடி உயரமான புத்தபெருமானின் சிலையை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று இடம்பெற்றது.

இதன் நிர்மாணப் பணிகளுக்காக சுமார் 900 இலட்சம் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விழாவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்ததாவது;

இன்று மகா சிங்கள பௌத்தர்கள் என கூறிக்கொள்ளும் ஒரு பிரிவினர் நாட்டில் உருவாகியுள்ளனர். அவர்கள் இன்னும் சிறிய எண்ணிக்கையானோர் என்பது அதிர்ஷ்டமாகும். இருப்பினும், அவர்கள் பயங்கரமானவர்கள். ஏனைய மதத்தவர்களுக்கு நாட்டில் வாழ உரிமை இல்லையென அவர்கள் கூறுகின்றனர். அவர்களின் வழிபாட்டு ஸ்தலங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களைத் தாக்குகின்றனர், தீ வைக்கின்றனர். 2500 ஆண்டுகளைக் கொண்ட எமது வரலாற்றில் எமது முன்னாள் சிரேஷ்ட மன்னர்கள் ஒருபோதும் இவ்வாறு கூறவில்லை.

நாம் வெளிநாட்டவர்களுடன் போராடியுள்ளோம். வேறு இனத்தவர்களுடன் நாம் போரிடவில்லை. எமது நாட்டில் எம்முடன் ஒன்றிணைந்து வாழவேண்டிய ஏனைய இனப் பிரிவினரை துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்குவது மிகவும் தவறான விடயம். '

No comments:

Post a Comment