Tuesday, April 23, 2013

இந்தியா - இலங்கை இடையேயான கடல் எல்லையில், சில நேரங்களில், இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழையும் போது, மனிதாபமான முறையில் நடந்து கொள்ளுங்கள்: ராணுவ அமைச்சர், அந்தோணி!

Tuesday, April 23, 2013
புதுடில்லி:;இந்தியா - இலங்கை இடையேயான கடல் எல்லையில், சில நேரங்களில், இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழையும் போது, மனிதாபமான முறையில் நடந்து கொள்ளுங்கள் என, இலங்கை அரசை, அவ்வப்போது வலியுறுத்தி வருகிறோம்' என, ராணுவ அமைச்சர், அந்தோணி கூறினார்.

லோக்சபாவில் நேற்று, கேள்வி ஒன்றுக்கு, எழுத்து மூலம் பதிலளித்த, அமைச்சர் அந்தோணி தெரிவித்ததாவது:இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையேயான கடல் எல்லையில், அவ்வப்போது இரு நாட்டு மீனவர்களும் அத்துமீறி நுழைந்து விடுவது வாடிக்கையாக நடந்து வந்ததால், 2008ம் ஆண்டு, இரு நாடுகளுக்கும் இடையே, உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது.அதன்படி, அத்துமீறும் அல்லது எல்லையைத் தாண்டும் இரு தரப்பு மீனவர்களின் படகுகள் மீது, துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடாது என, முடிவாகியது. எனினும், இலங்கை அரசால் குறிப்பிட்டப்பட்ட முக்கியமான பகுதிகளுக்குள், இந்திய படகுகள் நுழைய கூடாது எனவும் முடிவாகியது.

இந்த மாத துவக்கம் முதல், இப்போது வரை, 125 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படை பிடித்துச் செ

மற்றொரு கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில்,
ன்றுள்ளது. இதுபற்றி அறிந்த உடன், இலங்கை அரசை தொடர்பு கொள்ளும் இந்திய வெளியுறவுத்துறை, இந்திய மீனவர்களிடம் மனிதாபிமான முறையில் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறது.பாக் ஜலசந்தி பகுதியில், இந்திய கடற்படை, கடலோர காவல் படை கப்பல்கள், "ஆபரேஷன் தாஷா' என்ற பெயரில், சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணித்து, மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தி வருகின்றன.இவ்வாறு, அந்தோணி தெரிவித்துள்ளார்.
 
"போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் தொடர்புடையதாக கூறப்படும், இத்தாலிய வர்த்தகர், ஒட்டாவியோ குட்ரோச்சி வழக்கு, கைவிடப்பட்டதாக கருதப்படுகிறது. ஏனெனில், 20 ஆண்டுகளாக அவரை நாடு கடத்த முடியாததால், இந்நிலைக்கு வந்துள்ளோம்' என்றார்.

No comments:

Post a Comment