Tuesday, April 23, 2013

சகல அரச பல்கலைக் கழகங்களிலிருந்தும் புதிதாக வெளியாகிய சுமார் ஆயிரம் புதிய வைத்தியர்களுக்கு தமிழ் மொழிப்பயிற்சி!

Tuesday, April 23, 2013
இலங்கை::சகல அரச பல்கலைக் கழகங்களிலிருந்தும் புதிதாக வெளியாகிய சுமார் ஆயிரம் வைத்தியர்கள் டிசம்பர் மாத முடிவுக்குள் தங்களது நோயாளிகளுடன் தமிழ் மொழியில் உரையாடக்கூடிவர்களாக இருப்பர்.
இதற்கமைய, ஏற்கனவே வைத்தியர்களின் ஒரு குழுவினர் பத்து நாள் வதிவிடத் தமிழ் மொழிப்பயிற்சியைக் கடந்த வாரம் அகலவத்தையில் பெற்றுக் கொண்டனர்.
 
வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவிருக்கும் அடுத்த தொகுதி வைத்தியர் குழுவில் 65 புதிய வைத்திய அதிகாரிகள் பங்கேற்கவுள்ளதுடன், இவ்வருட இருதிக்குள் நாடளாவிய ரீதியில் ஆயிரம் வைத்தியர்களாவது தங்களது நோயாளர்களுடன் தமிழில் உரையாடக்கூடியதாக இருக்கும்.
 
வைத்தியர்களால் நோயாளியின் பிரச்சினையை சரியாக இணங்காணப்படாதவிடத்து சிகிச்சையளிப்பதில் சிக்கள்களை எதிர் நோக்கவேண்டியிருக்கும். எனவே இவற்றை நிவர்த்திக்கும் வகையில் சுகாதார அமைச்சின் ஆதரவுடன் மொழிப்பயிற்சித்திணைக்களமும் உலக சுகாதார நிறுவனமும் புதிதாக தகுதி பெற்ற வைத்தியர்களுக்கு இத் தமிழ்ப் ப
யிற்சித் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

No comments:

Post a Comment