Thursday, April 11, 2013

இலங்கை பிரச்னை தேர்தலில் எதிரொலித்திருந்தால் வைகோ முதல்வராகியிருப்பார் : ஞானதேசிகன்!

Thursday, April 11, 2013
திண்டுக்கல்::இலங்கை பிரச்னை தமிழக தேர்தல்களில் எதிரொலித்திருக்கும் என்றால், வைகோ முதல்வராகியிருப்பார்,'' என, காங்., மாநிலதலைவர் ஞானதேசிகன் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கட்சியை பலப்படுத்த கிராமங்கள்தோறும் கொடியேற்ற முடிவு செய்துள்ளோம். ஜூன் 15 துவங்கி, ஜூலை 15 வரை இந்நிகழ்ச்சிகள் நடக்கும். காமராஜ் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாட உள்ளோம். இது, கிராமமக்களிடம் மதுவிலக்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கும். இலங்கை மீனவர்களையும், தமிழக மீனவர்களையும் சந்திக்க வைத்து பேசிவிட்டால் மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.
 
2009 இறுதிக்கட்ட போரில் மனித உரிமைகள் மீறல் செய்தவர்களை தண்டிக்கவேண்டும் என்ற கருத்தில் காங்கிரசுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. லோக்சபா தேர்தலில் கூட்டணி என்பது, அறைக்குள் முடிவு செய்வது இதுகுறித்து வெளியே பேச முடியாது.
 
 இலங்கை பிரச்னை தமிழக தேர்தல்களில் பிரதானமாக எதிரொலித்திருக்கும் என்றால், வைகோ முதல்வராகியிருப்பார். தேர்தலுக்கும் இலங்கை பிரச்னைக்கும் சம்பந்தமில்லை. தமிழக அரசு, மத்திய அரசிற்கு ஒத்துழைப்பு தருவதில்லை. இருவரும் சேர்ந்து பிரச்னைகளை தீர்க்க வழிவகுக்க வேண்டும். கட்சத்தீவை மீட்பதில் காங்கிரசுக்கு ஆட்சேபமில்லை. இதில், சிக்கல் இருந்தால் நீண்டகால குத்தகைக்கு எடுக்கலாம். எந்தநேரத்தில் லோக்சபா தேர்தல் வந்தாலும் காங்கிரஸ் அதை சந்திக்க தயாராக உள்ளது, என்றார். ++
 
இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால் அதனால் இலங்கைத் தமிழர்களே கூடுதலாக பாதிக்கப்படுவர்!
 
இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால் அதனால் இலங்கைத் தமிழர்களே கூடுதலாக பாதிக்கப்படுவர் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதித்தால் மத்திய அரசாங்கத்தினால் யுத்த வலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகள் இடைநிறுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் யுத்த வலயத்தில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் மக்களே கூடுதலான பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்காக இந்திய மத்திய அரசாங்கம் 4000 கோடி ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளது.

இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிப்பதில் சிரமம் இல்லை என்ற போதிலும் இதனால் இலங்கை வாழ் தமிழர்கள் பாதிக்கப்படுவர்.

இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பில் தீர்மானம் நிறைவேற்றினால், இலங்கைக்கு ஆதரவான நாடுகள் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதனை நிராகரிக்கக் கூடுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment