Tuesday, April 16, 2013

இடைக்கால நிர்வாக அலகு ஒன்றை கோரவில்லை: தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு தெரிவித்துள்ளது!

Tuesday, April 16, 2013
இலங்கை::இடைக்கால நிர்வாக அலகு ஒன்றை கோரவில்லை: தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு தெரிவித்துள்ளது!

இடைக்கால நிர்வாக அலகு ஒன்றை கோரவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இடைக்கால நிர்வாக அலகு ஒன்றை அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ்த் தேசியக்  (புலி)கூட்டமைப்பும், மன்னார் ஆயரும் கோரியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், இந்தக் குற்றச்சாட்டை தமிழ்த் தேசியக்  (புலி)கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.
 
எந்த சந்தர்ப்பத்திலும் இடைக்கால நிர்வாக அலகு ஒன்றை அமைக்கப்பட வேண்டுமென கோரவில்லை என தமிழ்த் தேசியக்  (புலி)
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கில் மாகாணசபைத் தேர்தல்களை நடாத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
2012 செப்டம்பரில் தேர்தல் நடத்துவதாக முன்னர் அறிவிக்கபட்டிருந்தது எனவும் தற்போது 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கு அரசாங்கம் ஏன் காலம் தாழ்த்துகின்றது என்பது புரியவில்லை என  (புலி)சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment