Tuesday, April 16, 2013

வடக்கு கிழக்கிற்கு தனியான நிர்வாக முறைமை பொருத்தமற்றது: பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ!

Tuesday, April 16, 2013
இலங்கை::வடக்கு கிழக்கிற்கு தனியான நிர்வாக முறைமை பொருத்தமற்றது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் புலிகளின் கோரிக்கைகளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
13ம் திருத்தச் சட்டத்தையோ அல்லது அதற்கு அப்பாலான தீர்வுத் திட்டத்தையோ கூட்டமைப்பு விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
மாறாக வடக்கு கிழக்கில் தனியான நிர்வாக அலகு ஒன்றை உருவாக்குவதற்கு தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பு கூடுதல் அவதானம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தனியான நிர்வாக அலகு குறித்த யோசனைகளை முன்வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
வடக்கில் இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்ட போதிலும், அவர்களின் குடும்பங்கள் அங்கு தங்க வைக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
யுத்த நிறைவின் பின்னர் வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசாங்கம் பல்வேறு வழிகளில் நிவாரணங்களையும் உதவிகளையும் வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு உண்மையைக் கண்டறியவோ அல்லது அரசாங்கத்திடம் கேள்விகளை எழுப்பவோ இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment