Monday, April 29, 2013

இந்தியாவுடனான எல்லைப் பிரச்னை சுமுகமான முறையில் பேசி தீர்க்கப்படும்: சீன வெளியுறவுத் துறை!

Monday, April 29, 2013
பீஜிங்::இந்தியாவுடனான எல்லைப் பிரச்னை சுமுகமான முறையில் பேசி தீர்க்கப்படும்' என, சீன வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக, சீன வீரர்கள் இந்திய
எல்லையில் அத்து மீறி நுழைந்தது தொடர்பாக, பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், இந்த விஷயத்தை இந்தியா அமைதியான முறையில் பேசி தீர்க்கவே விரும்புவதாகவும், பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்தார்.
 
இதையடுத்து, சீனாவின் தரப்பிலும் இதே போன்ற பதில் தரப்பட்டுள்ளது. எல்லை பிரச்னையில், இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக, சீனாவின் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், விரைவில் எல்லை பகுதியில் பதற்றம் நீங்கி, அமைதி திரும்ப வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment