Monday, April 29, 2013

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மே தின விழாவுக்கு ஜனாதிபதி தலைமை: கொழும்பில் 5000 பொலிஸார் மேலதிக கடமை!

Monday, April 29, 2013
இலங்கை::ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்துள்ள மே தின பிரதான கூட்டம் இம்முறை கொழும்பு பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மே தின கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கின்ற சகல அரசியல் கட்சிகளும் கலந்துகொள்ளவுள்ளன.
 
நாட்டை கட்டியெழுப்பும் மே தின அலை’ என்ற தொனிப்பொருளில் இம்முறை நடைபெறவுள்ள ஐ. ம. சு. முன்னணியின் பிரதான மே தின கூட்டத்தில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பெருந்திரளானோர் கலந்து சிறப்பிக்கவுள்ளதாக தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்துள்ள மே தின ஊர்வலம் மற்றும் பிரதான கூட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு கொழும்பிலுள்ள மஹாவலி கேந்திரத்தில் நேற்றுக்காலை நடைபெற்றது.
 
பிரபல தொழிற்சங்கவாதியும் மேல் மாகாண ஆளுநருமான எஸ். அலவி மெளலானா, ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் லெஸ்லி தேவேந்திர, இலங்கை தொழிலாளர் சங்க மத்திய குழு பொதுச் செயலாளர் சோமவீர சந்திரசிறி ஆகியோர் கலந்துகொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் மேலும் விளக்கமளிக்கையில் :-
மே முதலாம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு கொழும்பு ‘தாமரைத் தடாகம்’ மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கிற்கு முன்னால் ஆரம்பமாகவுள்ள மே தின ஊர்வலம் டி. எஸ். சந்தி, பேஸ்லைன் வீதி, ஊடாக கெம்பல் பார்க் மைதானத்தை வந்தடையவுள்ளது. சகல தொழிற் சங்கங்களும், கட்சிகளின் பிரதிநிதிகளும், பொதுமக்களும் ஊர்வலமாக செல்ல உரிய நேரத்திற்குள் வருகை தருமாறும் அமைச்சர் அழைப்பு விடுத்தார்.
 
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளும், தொழிலாளர் வர்க்கத்தினரும் இந்த மே தினக் கொண்டாட்டத்திலும் ஊர்வலத்திலும் கலந்துகொள்ளவுள்ளனர். சில அரசியல் கட்சிகள் வழக்கம் போன்று தனியான கூட்டங்களை நடத்தினாலும் இறுதியில் மாலையில் நடைபெறவுள்ள ஐ. ம. சு. முன்னணியின் பிரதான கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர் என்றும் தெரிவித்தார். சம்பள நிர்ணய சபையுடன் பேச்சு வார்த்தை நடத்தி 25 வீதத்திலிருந்து 40 வீதம் வரையிலான சம்பள அதிகரிப்பை, அல்லது நிர்ணயத்தை தொழிலமைச்சு பெற்றுக் கொடுத்துள்ளது எனவும் தெரிவித்தார்.
 
தொழிலாளர்களின் நலனில் சகல சந்தர்ப்பங்களிலும் கவனம் செலுத்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொழிலாளர்களுக்கு தேவையானவற்றை பெற்றுக் கொடுத்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் இதனாலேயே இந்த ஆண்டு மிகவும் குறைந்தளவு வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்ட ஆண்டு என கூற முடியும் என்று சுட்டிக்காட்டினார்.
இதேவேளை ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு சகல சலுகைகளை வழங்கும் விதத்தில் புதிய வேலைத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட் டுள்ளதாக தெரிவித்த அமைச்சர்,  இது தொடர்பில் உருவாக்கப்பட்டுள்ள சட்ட வரைவு தற்போது சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு வழங்கப்பட் டுள்ளது என்றார்.
 
குறித்த சட்ட வரைபை அமைச்சரவைக்கு முழுமையாக சமர்ப்பித்த பின்னர் பாராளு மன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் குறிப் பிட்டார். நாட்டின் வளர்ச்சி மேம்பாட்டுத்துறைக்கு முழுமையான பங்களிப்புக்களை வழங்கும் தொழிலாளர் வர்க்கத்திற்கு தேவையான நிவாரணங்கள், வசதிகள், சலுகைகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசும், ஜனாதி பதியும் சகல சந்தர்ப்பத்திலும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
 
தொழிலாளர் வர்க்கத்தினரின் தொழிலை பாதுகாப்பதில் அரசு சகல சந்தர்ப்பங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதேவேளை மின்சார கட்டண மறு சீரமைப்பின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள 90 அலகு வரையிலான நிவாரணத்தை 120 அலகு வரை மறுசீரமைத்து தொழிலாளர் வர்க்கத்தினருக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்க்கவும் இதற்கான நிரந்தர தீர்வையும் காண நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றும் தொழிலாளர் சார்பில் கேட்டுக் கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
 
அலவி மெளலானா
 
தொழிலாளர் வர்க்கத்திற்காக வீதியில் இறங்கி போராடி உரிமைகளை பெற்றுக் கொடுத்த ஒரே ஒரு தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களாகும் என்று மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா தெரிவித்தார். தொழில் அமைச்சராக சிறந்த சேவையை வழங்கியவர் என்று தெரிவித்த அவர், ஜனாதிபதியின் மீது மக்கள் தொடர்ந்தும் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்றார்.
 
சோமவீர சந்திரசிறி
 
தொழிலாளர் வர்க்கத்தினருக்காக போராடுவதாக கூறிக்கொண்டு வேலை நிறுத்தங்களில் குதித்துக்கொண்டு உள்ளூர் மட்டத்தில் சர்வதேச மட்டத்தில் சூழ்ச்சிகளை செய்வதை முறியடிக்க வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் சங்க மத்திய குழு பொதுச் செயலாளர் சோமவீர சந்திரசிறி தெரிவித்தார்.
தொழிற்சாலைகளை மூடி தொழிலாளர் களின் தொழிலை இல்லாதொழித்த எதிர்க்கட்சியினருக்கு மே தினம் தொடர்பில் பேச எந்தவித அருகதையும் இல்லை என்றார்.
 
லெஸ்லி தேவேந்திர
 
மின்சாரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள மாபியாவை இல்லாதொழித்து தொழி லாளருக்கு உரிய சலுகையை வழங்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் லெஸ்லி தேவேந்திர தெரிவித்தார். அரச துறைக்கு சம்பள அதிகரிப்பை போன்று தனியார் துறையிலும் அமுல் படுத்தப்பட வேண்டும். மின் கட்டண அதிகரிப்பு உடனடியாக மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
 
5000 பொலிஸ் கடமையில்
 
இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. உள்ளிட்ட பிரதான கட்சிகளின் மே தினக் கூட்டங்கள் கொழும்பில் நடத்தப் படவுள்ளதைத் தொடர்ந்து கொழும்பு நகர் மற்றும் அதன் சுற்றயல் பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மே தினத்தன்று பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தவென மேலதிக 5 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட வுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜீ.எம். எச். புத்திக்க சிறிவர்தன தெரிவித்தார்.
 
கட்சிகளின் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு பொலிஸார் முழுமையான பாதுகாப்பினை வழங்கும் அதேசமயம் இதன் ஏற்பாட்டாளர்கள் தமது கட்சிக் காரர்களை அமைதியான முறையில் வழிநடத்தி தமக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க முன்வரவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
கொழும்பில் மே தினத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சூடுபிடித்துள்ளன. வெளியிடங்களிலிருந்து பொலிஸ் நிலைய மற்றும் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கடமைக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.
பிரதான கட்சிகளின் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் கொழும்பில் நடைபெறவுள்ள அதேநேரம், ஜனநாயக மக்கள் முன்னணி, நவசமசமாஜக் கட்சி, தேசிய ஐக்கிய முன்னணி ஆகியனவும் கொழும்பு குணசிங்கபுர பகுதியிலிருந்து தமது ஊர்வலங்களை நடத்த திட்டமிட்டி ருப்பதாகவும் அறிய முடிகின்றது.
 
மே தின ஊர்வலங்களில் கலந்துகொள் வதற்காக வெளியிடங்களிலிருந்து அநேக மானோர் கொழும்பு வரவிருப்பதால் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் விசேட வீதி போக்குவரத்துகளும் தரிப்பிட வசதி களும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
இதேவேளை, மே தினத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் கொழும்பு வரும் வாகனங்களின் சீரான போக்குவரத்து முறைமையினை கடைப்பிடிப்பதற்காக போக்குவரத்து பொலிஸார் விசேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
எனவே வாகன சாரதிகள் குடிபோதையில் வாகனம் செலுத்துவதையும் போக்குவரத்து சட்டதிட்டங்களை மீறுவதனையும் இக்காலப்பகுதிக்குள் முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக தூர இடங்களிலிருந்து கொழும்பு வருவோர் தமது கட்சிக்காரர்களை சந்திக்க முடியாமலும் கொழும்பின் பிரதேசங்களை அறிந்து வைத்திராமை யினாலும் அங்குமிங்குமாக அலைந்து திரியும் சந்தர்ப்பங்களை கடந்த காலங்களில் நாம் கண்டதுண்டு. அவ்வாறானதொரு நிலைமை இம்முறையும் தமது கட்சிக் காரர்களுக்கு ஏற்படாத வகையில் ஏற்பாட்டாளர்கள் வெளியிடங்களிலிருந்து வரும் பஸ் சாரதியுடன் நேரடி தொடர்பினை ஏற்படுத்தி அவர்களுக்கு வழிகாட்டி ஒத்துழைக்க முன்வரவேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

No comments:

Post a Comment