Monday, April 29, 2013

இந்திரா இருந்த போது, சிங்கள கேப்டன் ஒருவர், தமிழக மீனவர்களை, அடிக்கடி தாக்கி வருவதை கேள்விப்பட்டு, அந்தக் கேப்டனை கைது செய்ய, இந்திய கடற்படைக்கு உத்தரவிட்டார்: (23ம் புலிகேசி) கருணாநிதி!

Monday, April 29, 2013
சென்னை::இந்திரா இருந்த போது, சிங்கள கேப்டன் ஒருவர், தமிழக மீனவர்களை, அடிக்கடி தாக்கி வருவதை கேள்விப்பட்டு, அந்தக் கேப்டனை கைது செய்ய, இந்திய கடற்படைக்கு உத்தரவிட்டார்: (23ம் புலிகேசி) கருணாநிதி!
 
இலங்கை சிறையில் வாடும், தமிழக மீனவர்களை, உடனடியாக விடுவிக்க, மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:இலங்கை அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ராமேஸ்வரம் மீனவர்கள், 30 பேர், எப்படியும் இந்த முறை விடுவிக்கப்படுவோம் என்ற நம்பிக்கையோடு இருந்த நேரத்தில், மூன்றாவது முறையாக, மன்னார் மாவட்ட கோர்ட்டில், அடுத்த மாதம், 6ம் தேதி வரை, அவர்களின் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.இம்மாதம் 5ம் தேதி, கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, புதுச்சேரி, காரைக்காலைச் சேர்ந்த, 26 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்து, கோர்ட்டிலே ஆஜர்படுத்தி, சிறையிலே அடைத்துள்ளனர். கோர்ட், அவர்களை மே, 29ம் தேதி வரை, சிறையிலேயே அடைக்க உத்தரவிட்டுள்ளது.

பிரதமராக, இந்திரா இருந்த போது, சிங்கள கேப்டன் ஒருவர், தமிழக மீனவர்களை, அடிக்கடி தாக்கி வருவதை கேள்விப்பட்டு, கோபமடைந்தார். அந்தக் கேப்டனை கைது செய்ய, இந்திய கடற்படைக்கு உத்தரவிட்டார். இந்திய கடற்படை வீரர்களும், சிங்கள கேப்டனை பிடித்து வந்து, மண்டபத்தில் சிறை வைத்தனர்.

பின், அந்தக் கேப்டனையும், சக இலங்கை வீரர்களையும் மன்னிப்பு கேட்க வைத்து, இலங்கை அரசு திரும்பப் பெற்றது. இந்தச் சம்பவத்தை, மத்திய அரசு நினைவிலே கொண்டு, இந்திரா எடுத்த நடவடிக்கையைப் போல, தீவிரமான நடவடிக்கை தற்போதும் மேற்கொள்ள வேண்டும் என்பது தான் நம் மீனவர்களின் விருப்பம்.
மத்திய அரசு, மேலும் தயக்கம் காட்டுமேயானால், தமிழகத்தின் மீதும், தமிழக மீனவர்கள் மீதும் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்பதையே, அது தெளிவாக்கும்.அதை மத்திய அரசு மறந்து விடக் கூடாது.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment