Wednesday, April 17, 2013

புகலிடக் கோரிக்கையாளர்கள் ஏன் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக திகழ்கின்றனர் என்பதற்கு அவுஸ்திரேலிய பாதுகாப்புப் பிரிவான ஆசியோ விளக்கம் அளித்துள்ளது!

Wednesday, April 17, 2013
மெல்பர்ன்::புகலிடக் கோரிக்கையாளர்கள் ஏன் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக திகழ்கின்றனர் என்பதற்கு அவுஸ்திரேலிய பாதுகாப்புப் பிரிவான ஆசியோ விளக்கம் அளித்துள்ளது.
 
கால வரையறையின்றி தடுத்;து வைக்கப்பட்டுளு;ள சில புகலிடக் கோரிக்கையாளர்கள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக திகழ்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தாய் நாட்டில் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் வன்முறைகள் ஈடுபட்டமைக்கான சாட்சியங்கள் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மெல்பர்னில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்ந்தும்  புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
என்ன காரணத்திற்காக புகலிடக் கோரிக்கையாளாகள் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் ஆசியோ, ஒவ்வொரு புகலிடக் கோரிக்கையாளர்களுக்கும் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.
 
ஓர் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் வன்முறையின் மூலம் இலங்கையில் தனி இராச்சியமொன்றை அமைக்க முயற்சிப்பதாகக் ஆசியோவினால் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதேவேளை, 2009ம் ஆண்டில் 
புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர் பேரவையின் ட்ரவர் கிரான்ட் தெரிவித்துள்ளார்.
 
 புலிகள் அவுஸ்திரேலியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment