Wednesday, April 17, 2013

.20க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டம்: முதல்வர் துவக்கி வைத்தார்!

Wednesday, April 17, 2013
சென்னை::தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று (17.4.2013) சென்னை, நந்தனம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வெளிச்சந்தையில் அரிசியின் விலையைக் கட்டுப்படுத்தும் தமிழக அரசின் நடவடிக்கையாக, 20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்தார்.
 
தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழை பொய்த்ததாலும், கர்நாடகம், காவேரியில் தண்ணீர் திறந்து விடாததாலும், தமிழகத்தில் நெல் மகசூல் குறைந்துள்ளது. அதன் காரணமாக வெளிச் சந்தையில் அரிசி விலை உயர்ந்துள்ளது. அரிசி விலை உயர்வை உடனடியாகக் கட்டுப்படுத்த அமுதம் அங்காடிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சிறப்பு அங்காடிகள் மூலமாக ஒரு லட்சம் மெட்ரிக் டன் அரிசி கிலோ ஒன்றிற்கு  20 ரூபாய் என்ற விலையில் வெளிச்சந்தையில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் என்று முதல்வர் 2.4.2013 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவித்தார்.
 
அரிசியின் வெளிச் சந்தை விலை உயர்வை நிலைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் ஒரு லட்சம் மெட்ரிக் டன் அரிசியை அமுதம் அங்காடிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சிறப்பு அங்காடிகள் மூலமாக நுகர்வோருக்கு 20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி  என்ற குறைந்த விலையில் வழங்கும் திட்டத்தினை இன்று சென்னை, நந்தனம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் துவக்கிவைத்தார்.
 
இந்த விலை குறைந்த மற்றும் தரம் நிறைந்த அரிசி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நடத்தப்படும் அமுதம் கூட்டுறவு அங்காடிகள் மற்றும் புதிதாக திறக்கப்படவுள்ள  சிறப்பு கடைகள், கூட்டுறவுச் சங்கங்களின் மொத்த விற்பனை பண்டகசாலைகளால் நடத்தப்படும் சில்லறை அங்காடிகளில் பொது மக்கள் நலன் கருதி விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment