Wednesday, April 24, 2013

பயங்கரவாதத்தில் இருந்து சுதந்திரமடைந்த நாடு என்ற வகையில், ஏனைய உலக நாடுகளும் இதனை புரிந்து செயற்பட வேண்டும்: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ!


Wednesday, April 24, 2013
இலங்கை::பயங்கரவாதத்தில் இருந்து விடுபட ஒரே வழி பயங்கரவாத்திற்கு முத்திரைகளை ஒட்டாது, அதனை சரியாக புரிந்துகொள்வது மாத்திரமே என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 
 
பயங்கரவாதத்தில் இருந்து சுதந்திரமடைந்த நாடு என்ற வகையில், ஏனைய உலக நாடுகளும் இதனை புரிந்து செயற்பட வேண்டும் என்பதே தமது பிரார்த்தனையாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
 
இலங்கை போரை வெற்றி கொண்ட போதிலும் உலகில் உள்ள பல நாடுகள் பயங்கரவாத போரில் வெற்றிப்பெற முடியாது இருளில் தடவி பார்த்து கொண்டிருக்கின்றன.  உலகில் உள்ள வல்லரசு நாடுகளில் கூட இன்று குண்டுகள் வெடிக்கின்றன.  ஆசியாவாகட்டும், அரபு உலகமாகட்டும் எங்கிருந்தாலும் பயங்கரவாதம், பயங்கரவாதமே எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
 
பனாகொட இராணுவ முகாமில் நேற்று (23) நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஆயுதங்கள் மூலம் இலங்கையை இரண்டாக பிளவுப்படுத்த முடியாது என்பதை ஈழவாதிகள் புரிந்து கொண்டு விட்டனர்.  இலங்கைக்கு எதிராக எவரும் மீண்டும் ஆயுதங்களை ஏந்த இடமளிக்க போவதில்லை. 
 
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இலங்கை ஆயுதங்களை மௌனிக்க செய்தாலும் எமது அந்த ஆயுத மௌனத்தின் சாதகத்தை பயன்படுத்தி எதிரிகள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு நாட்டை பிளவுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. Hands down, Apple's app store wins by a mile. It's a huge selection of all sorts of apps vs a rather sad selection of a handful for Zune. Microsoft has plans, especially in the realm of games, but I'm not sure I'd want to bet on the future if this aspect is important to you. The iPod is a much better choice in that case. Partywear saree

    ReplyDelete