Wednesday, April 24, 2013

பொதுநலவாய அமைச்சர்களின் மாநாட்டில் செனல் 4 போர் சூனிய வலயம் திரைப்படத்தை வெளியிட உள்ளது - திவயின!

Wednesday, April 24, 2013
இலங்கை::எதிர்வரும் வெள்ளிக்கிழமை (26) ஆம் திகதி லண்டனில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் அமைச்சர்களின் மாநாட்டில் கலந்து கொள்ளும் அமைச்சர்களுக்கு, இலங்கைக்கு எதிராக அழுத்தங்களை ஏற்படுத்துவதற்காக செனல் 4 தொலைக்காட்சி தயாரித்த போர் சூனிய வலயம் திரைப்படத்தை லண்டனில் திரையிட திட்டமிட்டப்பட்டுள்ளது.
 
திரைப்படத்தின் இயக்குனர் கொல்லம் மெக்ரே மற்றும் புலம்பெயர் புலிகள் இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. இந்த திரைப்படம் லண்டனில் உள்ள புரண்லைன் ஸ்லிம் என்ற நிலையத்தில் திரையிடப்பட உள்ளதுடன், பொதுநலவாய நாடுகளின் அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என இந்த அமைச்சர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

1 comment:

  1. I'll gear this review to 2 types of people: current Zune owners who are considering an upgrade, and people trying to decide between a Zune and an iPod. (There are other players worth considering out there, like the Sony Walkman X, but I hope this gives you enough info to make an informed decision of the Zune vs players other than the iPod line as well.) Partywear saree

    ReplyDelete