Wednesday, April 24, 2013

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து, சென்னை விமான நிலையத்தில், ஐந்து அடுக்கு பாதுகாப்பு!

Wednesday, April 24, 2013
சென்னை::பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து, சென்னை விமான நிலையத்தில், ஐந்து அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
பெங்களூரு, மல்லேஸ்வரம் பா.ஜ., அலுவலகம் அருகே, கடந்த 17ம் தேதி, குண்டு வெடித்தது. இதில், 16 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக, தமிழகத்தை சேர்ந்த சிலரை பிடித்து, போலீசார் விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்தும், ஐ.பி.எல்., கிரிக்கெட் வீரர்கள், அவ்வப்போது சென்னை வந்து செல்வதை கருத்தில் கொண்டும், சென்னை விமான நிலையத்தில், நேற்று காலை முதல், ஐந்து அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப் பட்டு உள்ளது. விமான நிலையத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களும், தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. வாகனங்கள் நிறுத்தங்களில், வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய போலீசார், விமான நிலையத்தை, 24 மணி நேரமும் கண்காணிக்கின்றனர். அதேபோல், பயணிகளிடமும், ஐந்து அடுக்கு சோதனை நடத்தப்படுகிறது. "மறு உத்தரவு வரும் வரை, ஐந்து அடுக்கு பாதுகாப்பு அமலில் இருக்கும்' என, சென்னை விமான நிலைய போலீசார் தெரிவித்தனர்.
 

No comments:

Post a Comment