Tuesday, April 9, 2013

ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவில் முகமாலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த கண்ணிவெடி அகற்றும் பணிகள் மீண்டும் நாளை முதல் வழமைக்கு திரும்பும்: ஹலோ ட்ரஸ்ட்!


Tuesday, April 09, 2013
இலங்கை::ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவில் முகமாலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த கண்ணிவெடி அகற்றும் பணிகள் மீண்டும் நாளை(10) முதல் வழமைக்கு திரும்பும் என ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த எட்டாம் திகதி முகமாலையில் இடம்பெற்ற வெடி விபத்தின் போது கோணேசமுதலி முருகவேல் என்பவர் உயிரிழந்தார் இதனை தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டிருந்த பணிகள் மீண்டும் பத்தாம் திகதி வழமைக்கு திருகிறது என ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருகிறது. அச் செய்தி குறிப்பில்  மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது
 
கடந்த 08ஃ04ஃ2013 அன்று காலை 9.55 மணியளவில் முகமாலைப்பகுதியில் இடம்பெற்ற எதிர்பாராத வெடிவிபத்தானது  அங்கே தாங்கி எதிர்ப்புக்கண்ணிவெடி இருந்ததனால் நிகழ்ந்ததாகத் தெரிகிறது. (அல்லது மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் சாதனம); இதன்;போது  எமது நிறுவனப் பணியாளரான திரு.கோணேசமுதலி முருகவேல் என்பவர் சம்பவ இடத்தில் மரணமடைந்தார். வேறு பணியாளர்கள் எவரும் காயமடையவில்லை. ஹலோ ட்ரஸ்ற் இலங்கையில் 2002 எமது நடவடிக்கையை ஆரம்பித்ததிலிருந்து இதுதான் முதலாவது உயிரிழப்பு விபத்தாகும்.
பொலீஸ் மற்றும் இராணுவம், பிராந்திய மிதிவெடி செயற்பாட்டுச் செயலகம் என்பன எம்முடன் கூட்டாக இணைந்து விபத்து நடந்தமைக்கான காரணத்தைத் தீர்மானிப்பதற்காக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
 
முகமாலை மிதிவெடிப்பிரதேசம் கடந்த 2002இல் முன்னோக்குப் பாதுகாப்புப் பகுதியாக முதன்மைப்படுத்தப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இலங்கையில் இப்பிரதேசமானது மிகப்பெரிய மிதிவெடிப் பிரதேசமாகக் காணப்படுவதுடன் அதிகளவான மிதிவெடிகள் காணப்படும் பிரதேசமுமாகும். இந்த 13 சதுர கிலோமீற்றர் மிதிவெடி வயலில் எமது நிறுவனம் 01ஃ04ஃ2012 தனது பணியை ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை 3500 மிதிவெடிகளை அகற்றியுள்ளது. இப்பிரதேசமானது யு9 பாதையை அண்டியுள்ள பகுதிக் கிராமங்களைக் கருத்தில்கொண்டு துப்புரவுப்பணிக்காக முதன்மைப்படுத்தப்பட்டது. இப்பகுதியைத் துப்புரவு செய்வதன்மூலம் 49 குடும்பங்கள் (167 மக்கள்) மீளக்குடியேற உதவுவதுடன் மொத்தமாக 481 குடும்பங்கள் (1635 மக்கள்) மீளக்குடியேறுவதற்காக இப்பணி மேற்கொள்ளப்படுகின்றது.
 
சுற்றியுள்ள பிரதேசங்களில் வாழும் கிராம மக்களுக்கு பாதுகாப்பான நிலத்தை வழங்கவும் அவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தவும் உதவுவதுடன் புகையிரதப்பாதை அபிவிருத்திக்காகவும் நிலத்தை துப்புரவு செய்து வழங்கவும்; இப்பணி மேற்கொள்ளப்படுகின்றது. எனத் தெரிவிக்கும் ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்ததினர்
தங்கள் நிறுவனத்தில் இலங்கையில் தற்போதைய மொத்த உள்ளகப் பணியாளர்கள் 1,100 பேர் கடமையாற்றுகின்றார்கள் எனவும் குறிப்பிடுகின்றனர்.

No comments:

Post a Comment