Tuesday, April 9, 2013

தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது!

Tuesday, April 09, 2013
இலங்கை::தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
 
இலங்கையில் தனித் தமிழீழம் உருவாக்கப்பட வேண்டும் எனவும், இலங்கையை இந்தியா நட்பு நாடாக கருதக் கூடாது எனவும் தமிழக சட்ட சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனினும், இந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
 
இலங்கை தொடர்பில் மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களையம் விமர்சனங்களையும் வெளியிடும் தரப்பினர் உண்மை நிலைமைகளை நேரில் பார்வையிட இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
யுத்தத்தின் பின்னர் நாட்டில் பாரியளவில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
 
தமிழகத்தில் தேவையற்ற வகையில் இலங்கை எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.
வெளிநாடுகளில் வாழும் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த சிலர் இவ்வாறு தேவையற்ற வகையில் இலங்கைக் எதிராக போராட்டங்களை தூண்டி விடுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
இலங்கைக்கு எதிரான பல்வேறு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment