Tuesday, April 9, 2013

இலங்கைக்கு எதிராக தமிழகத்தின் திரைப்பட சூப்பர் ஸ்டார்கள் தொடர்ந்தும் உண்ணாவிரதம் இருந்தால், தமிழகத்தில் தயாரிக்கப்படும் திரைப்படங்களை புறக்கணிக்கும் போராட்டத்தை மலையகம் முழுவதும் முன்னெடுக்கபடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்!

Tuesday, April 09, 2013
இலங்கை::தமிழகத்தின் சினிமா நட்சத்திரங்கள் தொடர்ந்தும் உண்ணாவிரதம் இருந்தால்  விளைவு விபரீதம் என எச்சரிக்கிறது
இலங்கைக்கு எதிராக தமிழகத்தின் திரைப்பட சூப்பர் ஸ்டார்கள் தொடர்ந்தும் உண்ணாவிரதம் இருந்தால், தமிழகத்தில் தயாரிக்கப்படும் திரைப்படங்களை புறக்கணிக்கும் போராட்டத்தை மலையகம் முழுவதும் முன்னெடுக்க
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
 
இலங்கையில் வாழும் தமிழ் மக்களால் மிகவும் நேசிக்கப்படும் தமிழக நடிகர்கள் இலங்கையில் மீண்டும் இனவாதத்தை ஏற்படுத்தும் வகையில் இலங்கைக்கு எதிரான போராட்டங்களில் பங்கெடுத்தால்,  இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அந்த நடிகர்களின் படங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தும் போராட்டத்தை முன்னெடுக்க போவதாக  காங்கிரஸின் ஆலோசகர் ரி.வி. சென்னன் தெரிவித்துள்ளார்.
 
சகல இனத்தையும் துயரங்களுக்கு உள்ளாகிய 30 வருட போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், இலங்கையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் எந்த பேதங்களுமின்றி,  வாழ்வதை பொறுத்து கொள்ள முடியாத தமிழகத்தை சேர்ந்த அடிப்படைவாத கட்சிகள் மீண்டும் இலங்கையில் இனவாத போரை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றன என குற்றம் சுமத்தியுள்ள சென்னன், இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுள்ள தமிழ் திரைப்பட நடிகர்கள் இந்த அடிப்பவாதத்திற்கு உந்து சக்தியை கொடுக்கும் வகையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியுள்ளதால், மக்கள் அவர்கள் மீது அதிருப்தியடைந்து உள்ளனர் என கூறியுள்ளார்.
 
தொடர்ந்தும் அவர்கள் இவ்வாறான போராட்டங்களை நடத்தினால், தமிழ் திரைப்படங்களை இறக்குமதி செய்யப்படுவதை தடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் போராட்டங்களை முன்னெடுக்க போவதாகவும் சென்னன் குறிப்பிட்டுள்ளார். 

No comments:

Post a Comment