Saturday, April 13, 2013

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அனைத்து அதிகாரங்களுடன் கூடிய இடைக்கால தன்னாட்சி அதிகாரம் வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட மூன்று தமிழ் அரசியல் கட்சிகள் இந்தியா ஊடாக, இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன!

Saturday, April 13, 2013
இலங்கை::வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அனைத்து அதிகாரங்களுடன் கூடிய இடைக்கால தன்னாட்சி அதிகாரம் வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட மூன்று தமிழ் அரசியல் கட்சிகள் இந்தியா ஊடாக, இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
 
காணி, காவற்துறை, துறைமுகம்,  நிதி, வெளிநாட்டு நிதிகளை பெற்றுக்கொள்ளுதல், மீன்பிடி, கடலோர பாதுகாப்பு, விமான சேவைகள், கனிய வளம் உள்ளிட்ட பல அதிகாரங்கள் அடங்கிய இடைக்கால தன்னாட்சி நிர்வாகம் வழங்கப்பட வேண்டும் என அந்த கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.
 
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு இணங்குமாறு ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
அதேவேளை இந்தியா ஊடாக விடுக்கப்பட்ட இந்த கோரிக்கையை முற்றாக நிராகரித்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் என திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
 
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள மாகாண சபையினால் எந்த பிரயோசனமும் இல்லை எனவும் அதற்கான ஒரே தீர்வு இடைக்கால தன்னாட்சி அதிகாரமே எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது புதிய நிலைப்பாட்டை முன்வைத்துள்ளது. இந்த இடைக்கால தன்னாட்சி நிர்வாகத்திற்கான அதிகாரங்களை இலங்கையின் முன்னாள் சட்டமா அதிபர் சிவாபசுபதி தயாரித்துள்ளதாக அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment