Thursday, April 11, 2013

இலங்கையில் அப்பாவிகள் பலியானதற்கு புலிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளே காரணம்!

Thursday, April 11, 2013
இலங்கை::இறுதி கட்ட சண்டையின் போது, புலிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளால், அப்பாவி மக்கள் பலியானதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

இலங்கையில், ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையேயான சண்டை, 2009ல் முடிந்தது. இறுதி கட்ட சண்டையில், புலி தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார்.  
 
இலங்கை நடந்த சண்டையில் போர் குற்றம் நடந்ததாக ஐ.நா.,புகார் கூறியிருந்தது. இது தொடர்பாக சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் இரண்டு முறை தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இறுதியில் இந்த தீர்மானத்தில் திருத்தம் செய்யப்பட்டு, மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்கும் படி வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
சர்வதேச நாடுகளின் வலியுறுத்தலின் பேரில், இலங்கை அரசு, நல்லிணக்க ஆணை குழுவை அமைத்தது. இந்த குழுவின் பரிந்துரையின் பேரில், அப்பாவி மக்கள் பலியானது குறித்து இலங்கை ராணுவ நீதிமன்றம் விசாரணை நடத்தி அறிக்கை அளித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம், இந்த அறிக்கை, இலங்கை ராணுவ தளபதி ஜகத் ஜெயசூரியாவிடம் அளிக்கப்பட்டது. தற்போது இந்த அறிக்கை, இலங்கை பாதுகாப்பு செயலரான, அதிபரின் சகோதரர் கோத்தபயா ராஜபக்ஷேவிடம் அளிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
 
இறுதி கட்ட சண்டையின் போது அப்பாவி மக்கள் பலியானதற்கு ராணுவம் காரணமல்ல. பொதுவாக, போரின் போது, அப்பாவிகளின் உயிரிழப்பு தவிர்க்க முடியாதது. ஆனால், பெருமளவில் அப்பாவி மக்கள் பலியானதற்கு,  புலிகளின் சட்ட விரோத நடவடிக்கைகள் காரணமாக இருக்கலாம். இலங்கை அரசை குறை சொல்லும் சர்வதேச நாடுகள்,  புலிகளின் போர் குற்றத்தை தடுக்க தவறி விட்டன.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment