Monday, April 29, 2013
ராமநாதபுரம்::இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரை விடுவிக்க வலியுறுத்தி மே மாதம் 2 ம் தேதி முதல் சாலை மறியல் செய்ய மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேர் கச்சத்தீவு அருகே கடந்த 6 ம் தேதி மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அவர்கள் எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து அனுராதபுரம் சிறையில் அடைத்தனர். அவர்களுக்கு மன்னார் மாவட்ட நீதிமன்றம் கடந்த 16 ம் தேதி முதலில் சிறை தண்டனை விதித்தது. 16 ம் தேதி ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை கடந்த 28 ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. மூன்றாவது முறையாக நீதிமன்றம் 30 பேரையும் மே மாதம் 6 ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இந்த நிலையில் ராமேஸ்வரம் துறைமுகம் அருகே 13 மீனவர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மீனவர் சங்க தலைவர் போஸ் தலைமை வகித்தார். இதில் மீனவர் சங்க நிர்வாகிகள் ஜேசுராஜா, எமரிட், தேவதாஸ் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மத்திய, மாநில அரசுகள் விடுவிக்க எடுத்த நடவடிக்கை போதுமானதாக இல்லை. கடந்த 26 ம் தேதி மூன்றாவது முறையாக 30 ராமேஸ்வரம் மீனவர்களும் சிறை வைக்கப்பட்டிருப்பது மிக அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி அனைத்து மீனவர் சங்கங்களையும் ஒருங்கிணைத்து மே மாதம் 2 ம் தேதி சாலை மறியல் செய்வது என தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
No comments:
Post a Comment