Monday, April 29, 2013
இலங்கை::இலங்கையின் கரையோர பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.இலங்கை கரையோர பாதுகாப்பு பிரிவினருக்காக நடைபெற்ற இரண்டாம் கட்ட பயிற்சி நடவடிக்கையின் இறுதி நிகழ்வில் உரையாற்றிய போதே இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்செல் சிசென் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வு திருகோணமலை கடற்படை முகாமில் நடைபெற்றது. உலக நாடுகளின் எல்லைகளைப் பாதுகாப்பது தொடர்பில் அமெரிக்கா சிறப்பாக செயற்படுவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தக் கொள்கைக்கு அமைய, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளின் எல்லைகளை பாதுகாப்பதற்கான பயிற்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்குமெனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான முதற்கட்ட பயிற்சி நடவடிக்கைகள் கடந்தாண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்றதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment