Friday, April 19, 2013

புலிகள் கொழும்பு துறைமுகத்தில் தாக்குதல் நடத்த தேவையான தகவல்களை வழங்கினார்- 2 வருட கடூழிய சிறை!

Friday, April 19, 2013
இலங்கை::புலிகள் கொழும்பு துறைமுகத்தில் தாக்குதல் நடத்த தேவையான தகவல்களை வழங்கினார்- 2 வருட கடூழிய சிறை!

புலிகளின் உறுப்பினர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்து தாக்குதல் நடத்த தேவையான தகவல்களை வழங்கியமை, துறைமுகத்திற்குள் செல்லக் கூடிய வழிகளை காட்டிக் கொடுத்தமை தொடர்பான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட சிங்கள மீனவர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இரண்டாண்டு கடூழிய சிறைத் தண்டனையை வழங்கியுள்ளது. 
 
மேல் நீதிமன்ற நீதிபதி பி. பத்மன் சூரசேன இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.  விடுதலைப்புலிகளிடம் மூன்றரை லட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு, தகவல்களை வழங்கியதாக கூறப்படும் சிலாபம் பங்கதெனிய பிரதேசத்தை சேர்ந்த அன்டன் ரோஷன் நிஷாந்த பெர்ணான்டோ என்ற மீனவருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
 
2006 ஆண்டு செப்டம்பர் முதலாம் திகதி மற்றும் 2006 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி ஆகிய திகதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் புலிகளின் கடற்படைத் தளபதி சூசையை சந்தித்துள்ள இந்த மீனவர், அவரது ஆலோசனையின்படி கோபால் லோகேஷ்வரன் என்ற புலி உறுப்பினருக்கு சிலாபத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு படகில் செல்ல வழியை காட்டிக்கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment