Friday, April 19, 2013

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஏப்., 26 வரை சிறைகாவல் நீடிப்பு!

Friday, April 19, 2013
மண்டபம்::இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட, ராமேஸ்வரம் மீனவர்கள், 30 பேருக்கு, ஏப்., 26ம் தேதி வரை, சிறைக் காவலை நீடித்து, இலங்கை, மன்னார் கோர்ட் உத்தரவிட்டது. ராமேஸ்வரத்தில் இருந்து, ஏப்., 6ம் தேதி, மீன்பிடிக்கச் சென்ற, 30 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்து, தலைமன்னார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்; மீனவர்கள், அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள், ஏப்., 8ம் தேதி முதல், வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று, மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட, 30 மீனவர்களை, ஏப்., 26ம் தேதி வரை, சிறைக் காவலில் வைக்க, நீதிபதி அந்தோணி பிள்ளை, உத்தரவிட்டார்.
 
மன்னார் வளைகுடா கடல் கொந்தளிப்பு : மீனவர்கள் கடலுக்குச் செல்ல தயக்கம்!
 
மண்டபம்::மண்டபம், மன்னார் வளைகுடா கடல்பகுதியில் பலத்த காற்றுடன், கடல் கொந்தளிப்பாக உள்ளதால், பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல, தயங்கி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மன்னார் வளைகுடா கடல் பகுதி, சில நாட்களாக கொந்தளிப்புடன் உள்ளது. அலைகள் சீற்றமும் அதிகம். தூத்துக்குடி மாவட்டம், களியாப்பட்டிணம் பகுதியை சேர்ந்த, 25க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள், மண்டபம் பகுதியில் தங்கி தொழில் செய்து வருகின்றனர்.
பலத்த காற்றுடன், கடல் அலைகள் கொந்தளிப்பாக உள்ளதால், நேற்று முன் தினம், நான்குக்கும் குறைவான படகுகளில் மீன்பிடிக்க சென்றனர்.கடல் கொந்தளிப்பு தொடர்ந்தால், சொந்த ஊர் திரும்ப முடிவு செய்துள்ளனர். நாட்டுப்படகு மீனவர்கள், மன்னார் பகுதியில் மீன்பிடி தொழிலை விடுத்து, பாக்., ஜலசந்தி கடல் பகுதியில், மீன், நண்டு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment