Friday, April 26, 2013

25 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்!

Friday, April 26, 2013
இலங்கை::25 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். கிறிஸ்மஸ் தீவுகளிலிருந்து விசேட விமானமொன்றின் மூலம் குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக  குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஓ கோர்னர் தெரிவித்துள்ளார். எவ்விதமான பிரச்சினைகளும் இன்றி குறித்த 25 பேரும் நாடு கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
சர்வதேச சட்டங்களுக்கு  அமைவான முறையிலேயே குறித்த நபர்கள் நாடு கடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. உரிய வீசாவின்றி குறித்த நபர்கள் அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி முதல் இதுவரையில் 1029 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
 
புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான பிரகடனங்களுக்கு அமைவான வகையில் மட்டுமே புகலிடம் வழங்கப்படும் எகன அவர் தெரிவித்துள்ளார். சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் வகையில் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment