Friday, April 26, 2013
இலங்கை::சர்வதேச கடல் எல்லை குறித்து இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான 22ம் சர்வதேச கடல் எல்லை மாநாடே நடைபெறவுள்ளது.
இலங்கை::சர்வதேச கடல் எல்லை குறித்து இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான 22ம் சர்வதேச கடல் எல்லை மாநாடே நடைபெறவுள்ளது.
போதைப் பொருள் கடத்தல், மீனவர் பிரச்சினை போன்ற விடயங்கள் தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்படவுள்ளது. வட மாகாண கடற்படைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரால் ஷிராந்த உடவத்த தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகளுக்கும், தமிழக கடற்படை கட்டளைத் தளபதி ஏ.கே. மாதவன் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
இரு நாடுகளினதும் கடற்படையினருக்கு இடையில் வருடத்தில் இரண்டு தடவைகள் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவது வழமையாகும். இதேவேளை, கேரள கஞ்சாவைக் கடத்திய நான்கு இந்தியர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். வட கடற் பரப்பில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் இவர்களுடன் இரண்டு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment