Friday, April 26, 2013

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் சிலருக்கு அமெரிக்காவில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளது!

Friday, April 26, 2013
US::இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் சிலருக்கு அமெரிக்காவில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளது. படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட போது ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் தற்காலிகமாக அடைக்கலம் புகுந்திருந்தவர்களே இவ்வாறு அமெரிக்காவில் புகலிடம் பெற்றுக்கொண்டுள்ளனர்.
 
கடந்த ஆறு மாத காலமாக குறித்த இலங்கையர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் வாழ்ந்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 44 பேர் குறித்த படகில் பயணம் செய்ததாகவும், நடுக் கடலில் தத்தளித்தவர்களை சிங்கப்பூர் கப்பலொன்று மீட்டு டுபாய் அதிகாரிகளிடம் ஒப்படைத்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
இந்தப் புகலிடக் கோரிக்கையாளர்களில் 11 பேர் தற்போது அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸிற்கு சென்றுள்ளனர். இதேவேளை, இன்னமும் 19 புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்ந்தும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியுள்ளனர். நாடு திரும்பினால் உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 

No comments:

Post a Comment