Thursday, April 18, 2013

அமெரிக்காவின் பொஸ்டனில் வெடித்த குண்டுகள், புலிகளால் 1980களின் தொடக்கத்தில் இலங்கை இராணுவத்தினர் மீதான தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட குண்டுகளுக்கு ஒப்பானது: சவீந்திர சில்வா!

Thursday, April 18, 2013
வாஷிங்டன்::அமெரிக்காவின் பொஸ்டனில் வெடித்த குண்டுகள்,  புலிகளால் 1980களின் தொடக்கத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட குண்டுகளுக்கு ஒப்பானது என்று  இலங்கை இராணுவத்தின் மூத்த அதிகாரியான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
 
பொஸ்டன் குண்டுத் தாக்குதலுக்கு நேரக்கணிப்புடன் கூடிய, கரிமருந்து துகள், ஆணிகள், சிறிய இரும்புக் குண்டுகளை உள்ளடக்கிய இரண்டு மேம்படுத்தப்பட்ட வெடிமருந்துக் கருவிகள் பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
 
1980களின் தொடக்கத்தில்  புலிகள், நட்டுகள், போல்ட்களை உள்ளடக்கிய இத்தகைய வெடிகுண்டுகளை பயன்படுத்தியிருந்தனர். பொஸ்டன் குண்டுத் தாக்குதல் தொடர்பான ஊடக அறிக்கைகள், புலிகளாலும், இலங்கை  இராணுவத்துடன் போரிட்ட ஏனைய பல தீவிரவாத குழுக்களாலும், ஆரம்ப காலத்தில் தயாரிக்கப்பட்ட குண்டுகளைத் தான் நினைவுபடுத்துகின்றன. சில ஆண்டுகளுக்குப் பின்னர்,  புலிகள் துல்லியமான தொழில்நுட்பத்தை கொண்டிருந்தனர்.
 
மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் கருவிகளால் மூன்று தசாப்தங்களாக நாம் பயங்கரமான அனுபவங்களை பெற்றிருக்கிறோம்.இலங்கை படையினருக்கும் பொதுமக்களுக்கும் அதிகளவு சேதங்களை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் பெருமளவில் போல்ட் மற்றும் நட்டுகளை, தமது குண்டுகளில் பயன்படுத்தினர் என அவர் குறிப்பிட்டதுடன்,புலிகளின் நடவடிக்கைகள் குறித்த பரிசோதனைகள், இப்போதைய அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு உதவ முடியும். பொஸ்டன் மரதன் போட்டியின் முடிவிடத்தில் வைக்கப்பட்டிருந்த, ஆணிகள், போல் பெயாரிங்குகள் நிரப்பிய பிரசர் குக்கரே வெடிக்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவற்றை  புலிகள் பிரசர் குக்கர் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படவில்லை. ஆனால், குண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட உள்ளீடுகள்  புலிகளாலும் பயன்படுத்தப்பட்டவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment