Thursday, April 18, 2013

இலங்கை அகதிகளை ஆஸ்திரேலியா அனுப்ப ஏற்பாடு: ஏஜன்டாக செயல்பட்ட இருவர் கடலூரில் கைது!

Thursday, April 18, 2013
முதுநகர்::இலங்கை அகதிகளை ஆஸ்திரேலியா அனுப்ப ஏஜன்டாக செயல்பட்ட இலங்கை அகதி உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். இலங்கைத் தமிழர்கள் பலர் தமிழகத்தில் அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்களில், பலர் திடீரென ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அகதிகளாக தப்பிச் செல்கின்றனர். இதனைத் தடுக்கும் பொருட்டு, அகதிகள் முகாம்களை "கியூ' பிராஞ்ச் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு முகாம்களைச் சேர்ந்த இலங்கை அகதிகள் 120 பேர், கள்ளத்தனமாக விசைப் படகில் ஆஸ்திரேலியா தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களை, கட

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கடலோர பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அதில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள முகாம்களில் உள்ள அகதிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு கள்ளத்தனமாக ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பும் ஏஜண்டுகள் கடலூரில் தங்கியிருக்கும் தகவல் "கியூ' பிராஞ்ச் பிரிவு போலீசாருக்கு கிடைத்தது.

அதன்பேரில், கடலூர் துறைமுகம் பகுதியில் பதுங்கியிருந்த, கன்னியாகுமரி மாவட்டம், பெருமாள்புரம் முகாமைச் சேர்ந்த ரவிச்சந்திரன், 23, புதுச்சேரி மாநிலம், வம்பா கீரப்பாளையத்தைச் சேர்ந்த வேலு, 40, ஆகி@யாரை நேற்று முன்தினம் பிடித்து விசாரித்தனர்.

அதில், இவர்கள் இருவரும் மதுரை, மேலூரைச் சேர்ந்த வீரமணி, சேட்டு ஆகியோர் ஆஸ்திரேலியாவிற்கு இலங்கை அகதிகளை படகுகள் மூலம் அனுப்ப திட்டம் தீட்டியதும், இதற்காக கள்ளத்தோணி ஏற்பாடு செய்வது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து "கியூ' பிரிவு போலீசார், இருவரையும் நேற்று கடலூர் துறைமுகம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து, இலங்கை அகதி ரவிச்சந்திரன், புதுச்சேரி, வம்பா கீரப்பாளையத்தை சேர்ந்த வேலு ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள வீரமணி, சேட்டு ஆகியோரை தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட வேலு, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் கடலூரில் இருந்து இலங்கை அகதிகள் ஆஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல விசைப்படகு ஏற்பாடு செய்த வழக்கில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லோர காவல் படையினர் மடக்கிப் பிடித்தனர்.

No comments:

Post a Comment