Sunday, April 21, 2013

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் சரணடைந்த 17000 புலிபோராளிகளில் 11500 பேருக்கு புனர்வாழ்வு அளித்து விடுதலை: சந்திரசிறி கஜதீர!

 
Sunday, April 21, 2013
இலங்கை::புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கீழுள்ள புனர்வாழ்வு அதிகார சபையினால் கிழக்கு மாகாணத்தில் கடந்த 30 வருட கால பயங்கரவாத வன்செயல்கள் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈடுகள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில், உற்பத்தி திறன் அபிவிருத்தி அமைச்சர் பஷீர் ஷேகுதாவூத், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஜி.எஸ்.விதானகே, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் மற்றும் திணைக்கள அதிகாரிகள் உட்பட புனர்வாழ்வு அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
இதன்போது கிழக்கு மாகாணத்தில் கடந்த கால பயங்கரவாத கொடூர யுத்த்தினால் உயிர்களை இழந்த, காயமடைந்த மற்றும் சொத்துக்களை இழந்த பொதுமக்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு 32 மில்லியன் ரூபா நட்டஈட்டு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.
இவர்களில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்கள் 503 தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கு நட்டஈட்டு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது......

கடந்த 30 வருட கால யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அரசாங்கத்திடம் சரணடைந்த 17 ஆயிரம்  புலிபோராளிகளில் 11500 பேருக்கு புனர்வாழ்வு அளித்து அவர்களின் உறவுகளிடம் ஒப்படைத்து விட்டோம். எஞ்சிய 4500 பேரை விரைவில் உறவினர்களிடம் ஒப்படைக்கவுள்ளோம்' என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கீழுள்ள புனர்வாழ்வு அதிகார சபையினால் கிழக்கு மாகாணத்தில் கடந்த 30 வருட கால பயங்கரவாத வன்செயல்கள் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈடுகள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,
'நீண்ட கால யுத்தத்திற்கு பிறகு நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்திருக்கின்றோம். தமிழ் முஸ்லிம் சிங்கள எவ்வித பிரச்சினையுமின்றி ஒற்றுமையுள்ள மூவின மக்களாக வாழ வேண்டும். யுத்த காலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு கால்களை இழந்தோர், அங்கவீனர்கள், சொத்துக்களை பொருளாதாரத்தை இழந்தவர்கள் ஆகியோருக்கான காசோலைப் பத்திரங்களை வழங்குகின்றோம்.

புனர்வாழ்வுக்காக எமது அதி மேன்மை தங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எமது அமைச்சுக்காக 2013 ம் வருடம் 200 மில்லியன் ரூபாக்களை ஒதுக்கியுள்ளார். இன்று புனர்வாழ்வு அளிக்கப்டுவோர், ஒரு காலத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதமேந்தியவர்கள். யுத்தம் வடக்கு கிழக்கு மட்டுமல்ல. நானும் புலிப்பயங்கரவாதிகளின் ஒரு குண்டில் உயிரிழக்கத் தயாராக இருந்தேன். ஆனால் தப்பினேன்.

சமூகத்தின் பிரச்சினையை அறிந்து நாங்கள் எல்லோரும் சமூகத்துடன் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். 30 வருட கால புலிபயங்கர யுத்தத்தின் போது, புலிபயங்கரவாதத்தை உபயோகித்தார்கள். இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்நாட்டிற்கு குறிப்பாக எமதூரிற்கு பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றார். அபிவிருத்தி நடக்கின்றது. முன்னாள் போராளிகளுக்கு அமைய தவறுகளை சீர்செய்து அவர்களை நாங்கள் நம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

இம்மாதம் 27, 28 ம் திகதிகளில் வவுனியாவிலுள்ள புனர்வாழ்வழிக்கபட்ட முன்னாள் போராளிகளை கொழும்புக்கு சுற்றுலா அழைத்துச் சென்று, பாராளுமன்றம், கொழும்பிலுள்ள பல்வேறு முக்கிய இடங்கள், காலி அதிவேக பாதையூடாகச் சென்று காலி, மாத்தற, ஹம்பாந்தோட்டை, மத்தள ராஜபக்ஷ விமான நிலையம் உள்ளிட்ட பல இடங்களை பார்வையிடுவதற்காக அவர்களை சுற்றுலா கொண்டு செல்ல இருக்கின்றோம்.

புனர்வாழ்வு பெற்றுள்ள 180 பேரை அடையாளம் கண்டு, அவர்களுக்கு சுகததாச விளையாட்டரங்கில் பல்வேறு விளையாட்டு பயிற்சிகளும் வழங்கப்பட்டன. அதில் தேசிய மட்ட குறி பார்த்து சுடும் போட்டியில் 4 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளுக்கும் செல்லவுள்ளனர். அதே போன்று கராத்தே, கபடி போன்ற பல்வேறு விளையாட்டுக்களிலும் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களும் இந்த போட்டிகளில் பங்கு பற்றவுள்ளனர். இதன் மூலம் இலங்கைக்கான புகழையும் இவர்கள் ஈட்டிக்கொடுக்கவுள்ளனர்.

புனர்வாழ்வு பெற்ற பலர் கலை, இக்கியம், விளையாட்டு போன்ற பல் வேறு துறைகளிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இனம், மதம், மொழி, பிரதேசம், சாதி, கட்சி பார்த்து இந்த நட்ட ஈட்டுக் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை. இவைகளுக்கப்பால் பாதிக்கப்பட்டவர்களின் விண்ணப்பங்கள் பரீசிலிக்கப்பட்டு, கட்டம் கட்டமாக இந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இன்று சமூகத்தில் புனர்வாழ்வு பெற்று வரக்கூடியர்களை அழைத்து அவர்களிடத்தில் முரண்பாடுகளை தோற்றுவிக்க முனைகின்றனர். இவ்வாறான முரண்பாடுகளை தூண்டிவட்டு வேடிக்கை பார்க்கக்கூடிய மாறுபட்ட சிந்தனைகளை தோற்ற முயற்சிக்கலாம். இலங்கையில் நாம் எல்லோரும் சாதி, மொழி, இனம், கட்சி பேதமின்றி ஒற்றுமையாக ஒரே தாய்மக்களாக மாற வேண்டும்.

யுத்தத்தின் போது ஆயுதமேந்தியவர்கள், கழுத்திலே சைனட் குப்பிகளை தொங்கவிட்டவர்கள் இன்று சிறந்த வியாபாரிகளாக நேர்மையானவர்களாக இருக்கிறார்கள். முல்லைத்தீவு பிரதேசத்தில் சரத்குமார் என்பவர் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

No comments:

Post a Comment