Monday, April 22, 2013

இலங்கை அரசாங்கத்தின் மீது வீண்பழியை சுமத்த வடபகுதியில் தமிழ்தேசியக் (புலி)கூட்டமைப்பு முயற்சி!:அரசாங்கத்தின் மீதும், பாதுகாப்புப் படையினர் மீதும் திட்டமிட்டு குற்றம் சுமத்தும் வகையில் புலிகளுக்குப் வால்பிடிக்கும் தமிழ்த்தேசிய (புலி)கூட்டமைப்பினர் ஈடு பட்டு வருவது கண்டிக்கத்தக்கது!

Monday, April 22, 2013
இலங்கை::அரசாங்கத்தின் மீது வீண்பழியை சுமத்த வடபகுதியில் தமிழ்;தேசியக்(புலி)கூட்டமைப்பு முயற்சி!
 
யுத்தம் வேண்டாம், அமைதி வேண்டும் என்ற உணர்வு இன்று வடபகுதி மக்களிடையே அதிகரித்திருப்பதனால் எல்.ரி.ரி.ஈ. க்கு பக்கச்சார்பாக இருந்து கடந்த காலத்தில் செயற்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர், பிரிவினைவாத கொள்கையை முன்வைத்து அரசியல் நடத்துவது குறித்து அதிருப்தி அடைந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்கள் எதிர்ப்பை கூட்டமைப்புக்கு பகிரங்கமாக எடுத்துக் காட்டியுள்ளார்கள்.
 
வடபகுதியில் தற்போது நடைபெற்று வரும் திருட்டு, கொள்ளைச் சம்பவங்கள், வன்முறைகள் அனைத்தையுமே அரசாங்கத்திற்கும் ஆயுதப்படையினருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காக சில அரசியல் கட்சிகளும் தேசத்துரோக அமைப்புகளும் திட்டமிட்டு செயற்படுத்தி வருவதாக பாதுகாப்பு வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.
இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை கைது செய்து சட்டபூர்வமான முறையில் தண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அரசாங்கம், பொலிஸாருக்கும் ஆயுதப் படையினருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக நம்பகரமான அரசி யல் வட்டாரங்கள் தெரிவித்தன.
 
சர்வதேச ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்படும் போலிப் பிரசாரங்களுக்கு இத்தகைய சம்பவங்கள் வலுவூட்டுவ தாக அமைகின்றன. தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் களையடுத்தே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
வடபகுதிக்கான மாகாண சபைத் தேர்தலை நடத்துவது பற்றி அரசாங் கம் முடிவெடுக்கவுள்ள சந்தர்ப்பத்தில், மக்களின் ஆதரவை தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு திருப்பிவிடும் ஒரு சதித்திட்டமே இதுவென்றும் அரசாங்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. பத்திரிகை அச்சகங்களை தாக்கி தீ வைத்தல், பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் முகமூடி அணிந்த சில விசமிகள் மோட்டார் சைக்கிள்களில் வந்து வன்முறைகளில் ஈடுபடுதல் போன்ற சம்பவங்களின் மூலம் ஆயுதப்படை மற்றும் பொலிஸார் மீதும் சேறு பூசுவதற்கு எடுக்கும் ஒரு நடவடிக்கையாகவே இது கருதப்படுகிறது.
 
இத்தகைய சூழ்நிலையில், விரைவில் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் படுதோல்வியை எதிர்நோக்க வேண்டுமென்ற அச்சத்தினால், அரசாங்கத்தின் நற்பெயருக்கு தீங்கிழைக்கக்கூடிய வகையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு செயற்படுவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. கூட்டமைப்பை ஆதரிக்கும் விஷமி களும், தேசத்துரோக சக்திகளும் திரைமறைவில் இருந்து தூபமிட்டு வடபகுதியில் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.
 
அரசாங்கத்தின் மீதும், பாதுகாப்புப் படையினர் மீதும் திட்டமிட்டு குற்றம் சுமத்தும் வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் ஈடு பட்டு வருவது அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளதாக நம்பகரமான உயர்மட்ட வட்டாரங்கள் கூறின.
 
இராணுவம் பொதுமக்களை கொடுமைப்படுத்தவில்லை என்பதை முழு உலக நாடுகளுக்கும் தெரியப்படுத்துவதற்காக மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பும் பணிகள் இராணுவத்தினரால் தற்போது ஆரம் பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய நாளாந்தம் ஒரு இலட்சத்து 72ஆயிரம் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருவதாக கிளிநொச்சியின் ஐந்தாவது படைப்பிரி வின் கட்டளைத் தளபதியான லெப்டினன்ட் கேர்ணல் அஜித் பி. விக்ரமசேகர கூறினார். எல்.ரி.ரி.ஈ.யின் தலைமையகமாக இருந்து வந்த கிளிநொச்சியில், இடம்பெயர்ந்த மக்களுக்கென இராணுவம் நாளாந்தம் செய்யும் பணிகள் பற்றிய ஆதாரபூர்வமான விபரங்கள் இதன் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன.
உலகெங்கிலும் இருக்கும் அரசியல்வாதிகள், அரசாங்கத் தலைவர்கள், கல்விமான்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், நீதிபதிகள் உட்பட அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவதற்காக தினமும் ஒரு இலட்சத்து 72ஆயிரம் மின்னஞ்சல் மூலம் தகவல் களை அனுப்பிக் கொண்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.
 
யுத்தம் முடிவடைந்த கடந்த சுமார் நான்காண்டு பகுதியில் அரசாங்க அமைப்புகள் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களுக்காக நிர்மாணி த்த ஆயிரக்கணக்கான வீடுகளை விடவும் கிளிநொச்சியில் இருந்து இடம்பெயர்ந்த 54ஆயிரம் குடும்பங்களுக்கு இராணுவத் தினர் தங்களது சொந்தப் பணத்தையும், இராணுவ வீரர்களின் உடல் உழைப்பையும் கொண்டு 25ஆயிரம் வீடுகளை நிர்மாணித் துக் கொடுத்திருப்பதாக கிளிநொச்சி மாவட்டத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்தார்.
 
இவ்வாண்டில் மேலும் 354வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க இராணு வம் திட்டமிட்டிருப்பதாகவும் இதில் 96 வீடுகளின் நிர்மாணப் பணிகள் முடிவடைந்துள்ளது என்றும் அவர் கூறினார். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான சீமெந்து, கல், மணல் போன்ற வீடமைப்புக்கு தேவையான பொருட்கள் அனைத் தும் இராணுவத்தினரால் கொள்வனவு செய்யப்பட்டன. இராணுவ வீரர்களே அதனை நிர்மாணிக்கும் முழுப் பொறுப்பையும் மேற்கொண்டார்கள் என்று தெரிவித்த அவர், இந்த வீட்டின் தற்போதைய மொத்த பெறுமதி மூன்றரை இலட்சம் ரூபா எனவும் கூறினார்.
 
பாடசாலைப் பிள்ளைகளின் கல்விக்கு ஊக்கமளிப்பதற்காக இராணு வத்தைச் சேர்ந்தவர்கள் தாங்களே விரும்பி தங்கள் வருமானத் தின் ஒரு பகுதியை ஒதுக்கிக் கொடுத்து, தரம் ஒன்று முதல் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெறும் வரையில் கல்வி பயிலும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு வருடம் ஒன்றுக்கு 10ஆயிரம் ரூபா வரையில் புலமைப் பரிசில்களை வழங்குவதாகவும் மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்தார்.

No comments:

Post a Comment