Saturday, March 30, 2013
இலங்கை::பிரபாகரனுக்கு உதவிய நாடுகள் மற்றும் அரசியல்வாதிகள் குறித்த தகவல்களை தாம் முதலில் வெளியிட போவதாக பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.
போர் குற்றம் தொடர்பில் கருணாவிடமும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட்லி ஹெடம்ஸ் தெரிவித்திருந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே கருணா இதனை குறிப்பிட்டுள்ளார்.
புலிகளுக்கு உதவிய தரப்பினர் குறித்த அறிந்த ஒரே நபர் நான். நோர்வே, சுவிஸர்லாந்து, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு நான் பயணம் செய்துள்ளேன். 409 ஆயுத ரகங்கள் தொடர்பான பட்டியலை பேங்கொக்கில் உள்ள விடுதியொன்றில் வைத்து, ஐஸ்சர் என்ற ஆயுத விற்பனை பிரதானியிடம் வழங்குமாறு பிரபாகரன் என்னிடமே அந்த பட்டியலை வழங்கினார்.
நான் நோர்வேயில் உள்ள ஆயுத நிறுவனங்களுக்கும் சென்றிருந்தேன். இதனால் கண்ணாடி வீடுகளுக்குள் இருந்து கொண்டு கல்லெறிய வேண்டாம் என அரசசார்பற்ற நிறுவனங்களை கேட்டுக்கொள்கிறேன். அரசசார்பற்ற நிறுவனங்களும் புலிகளுக்கு உதவின. அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றே பிரபாகரனுக்கு குண்டு துளைக்காத பிராடோ வாகனத்தை வழங்கியது எனவும் கருணா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment