Saturday, March 30, 2013

தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை இந்திய மத்திய அரசாங்கம் நிராகரித்துள்ளது

Saturday, March 30, 2013
சென்னை::தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை இந்திய மத்திய அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இந்தியாவில் உள்ள தனி மாநிலம் ஒன்றின் தீர்மானத்தை, முழு இந்தியாவின் நிலைப்பாட்டாக எடுத்துக் கொள்ள முடியாது என்று, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்சித் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.என். லைவ் இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையை இந்தியாவின் நட்பு நாடாக கருதகூடாது எனவும், இலங்கையில் தனி தமிழீழம் அமைப்பதற்காக கருத்து கணிப்பு நடத்த இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றும் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதித்தல் ஆகிய தீர்மானங்களை நேற்று தமிழக சட்டசபை நிறைவேற்றி இருந்தது.

எவ்வாறாயினும் இந்த தீர்மானங்கள் அனைத்தையும் இந்தியாவால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சல்மான் குர்சித் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் இவ்வாறான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுமாக இருந்தால், அதனை இந்தியா ஏற்று செயற்பட வேண்டிய நிலை உள்ளது.

எனவே இந்த விடயத்தில் இலங்கை தமிழர்கள் மீது தமிழ்நாட்டுக்கு உள்ள அபிமானத்தை இந்திய மத்திய அரசாங்கம் கருத்தில் கொள்கின்ற போதிலும், அதன் தீர்மானங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை தமிழர்கள் மீது தமிழக கட்சிகளுக்கும், மக்களுக்கும் இருக்கின்ற அன்பும், அக்கறையும் இந்திய மத்திய அரசாங்கத்துக்கும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதே உணர்வு காங்கிரஸ் கட்சியில் உள்ள உறுப்பினர்கள் மத்தியிலும் இருக்கின்றது.

அதேவேளை, இந்த விடயங்கள் குறித்து இந்திய மத்திய அரசாங்கம் இலங்கையுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள், மற்றும் ராஜதந்திர செயற்பாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவை என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment