Friday, March 29, 2013
இலங்கை::பயங்கரவாத ஒழிப்பு குறித்து அமெரிக்காவிற்கு உதவிகளை வழங்கத் தயார் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு பயங்கரவாத ஒழிப்பு குறித்த ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கத் தயார் என அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற பகுதிகளை மீளக் கட்டியெழுப்பும் முனைப்புக்களுக்கு ஆதரவு வழங்கும் சந்தர்ப்பம் அமெரிக்காவிற்கு காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.கல்வி, கடலோரப் பாதுகாப்பு,
சக்தி வளம் மற்றும் சுற்றுலாத்துறை போன்ற பல்வேறு துறைகளில் முதலீட்டாளர்கள் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் தொடர்பில் கவனிக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சரியான பாதையில் நகர்வதாகவும், அமெரிக்காவுடனான உறவுகளை விஸ்தரிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.எதிர்பாராத சவால்களை சந்திக்க நேரிட்டதனால் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை அமுல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைப் பாதுகாப்பு, மேம்பாடு என்பன குறித்து இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கம் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கும் நடவடிக்கைள் துரித கதியில் மேற்கொள்ளப்படக் கூடாது எனவும் போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஜனநாயகம் மட்டும் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அரசாங்கம் முயற்சித்து வருவதாக தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment