Friday, March 29, 2013
சென்னை::மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோ வை கைது செய்யுமாறு ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம்சுவாமி கோரியுள்ளார்.இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசத்திற்கு எதிராக வை.கோ மோசமான விமர்சனத்தை வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய குற்றவியல் சட்டத்தின் 124ஏ மற்றும் 125 சரத்துக்களின் அடிப்படையில் வைகோவின் கருத்துக்கள் தண்டனைக்குரிய குற்றமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.வைகோவை உடனடியாக கைது செய்து அவருக்கு எதிராக வழக்குத் n;தாடர வேண்டுமென அவர் கோரியுள்ளார்.வடக்கு இந்தியர்களை தமிழக மக்கள் மீது கிளர்ச்சியடையச் செய்யும் வகையில் இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் கருத்து வெளியிட்டதாகவும், இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் வை.கோ கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment