Friday, March 29, 2013
இலங்கை::இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் இலங்கையர்களுக் கெதிரான வன் செயல்களை இட்டு இலங்கை தொழில் வல்லுனர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் ‘இது வங்குரோத்து அரசியல் வாதிகளினால் குண்டர்களைக்கொண்டு இரு நாட்டு மக்களிடையேயும் எதிர்ப்புணர்வை வளர்க்கும் செயல்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் இதுபோன்ற வன்செயல்களை ஒருபோதும் ஆதரிக்கவில்லை எனினும் சில அரசியல் சக்திகளின் ஆதரவுடனே இவ்வாறான வெறுக்கத்தக்க செயல்கள் இடம்பெறுகின்றன. இத்தகைய அரசியல் சக்திகள் எவ்வாறானவர்களென்றால் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை கதாநாயகனாக கருதி புலிப்பயங்கரவாதிகளுக்கு பொருள் மற்றும் நிதி உதவிகளைச் செய்திருந்தனர். அத்தகைய தீவிரவாதிகள் சிறுவர்களை தற்கொலைக் குண்டுதாரிகளாகவும் அப்பாவி இளைஞர்களை யுத்தத்திலீடு படுத்தியும் ஆயிரக்கணக்கான பொதுமக்களை கொண்டு குவித்தமையும் அத்துடன் தமிழ் தலைவர்களை படுகொலை செய்தது மட்டுமல்லாது முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியையும் படுகொலை செய்தமை உலகமறிந்த உண்மையாகும்.
இத்தகைய தமிழ் நாட்டு அரசியல் சக்திகளே தற்போது வெளிப்படையான செயலில் இறங்கியுள்ளனர் என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment