Friday, March 29, 2013

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது புலிகள் தமது பீரங்கி நிலைகளை பொதுமக்களின் வாழ்விடங்களில் நிறுவினர்’-பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ!

Friday, March 29, 2013
இலங்கை::இறுதிக்கட்ட யுத்தத்தின்போது புலிகள் தமது பீரங்கி நிலைகளை பொதுமக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் நிறுவினர்.அத்துடன் அவர்கள் பொதுமக்கள் போன்று ஆடை அணிந்திருந்ததால் படையினர் பெரும் சிரமத்துக்கு மத்தியில் போரிட வேண்டியிருந்தது.எனினும் பொது மக்களின் இறப்புக்களை தவிர்க்கும் வகையில் பாதுகாப்புப் படையினர் நடவடிக்கைகளை மேற் கொள்ளவேண்டியிருந்தது.

மேலும் இராணுவத்தினரால் கனரக ஆயுதங்களை பயன்படுத்த முடியாமலிருந்தது.எனினும் படையினர் எல்லா சந்தர்ப்பங்களிலும் பொதுமக்களின் உயிர் இழப்புக்களையும் உடமைகளையும் கருத்திற்கொண்டே நடவடிக்கைகளை மேற் கொள்வேண்டியிருந்தது. அதேவேளை புலிகளோ அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் தப்பிச்செல்லும் அப்பாவிப் பொதுமக்களை இரக்கமற்ற முறையில் கொண்று குவித்தனர். என புகாப்புச் செயலாளர் காலியிலுள்ள லைட்ஹவுஸ் ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போது குறிப்பிட்டார்.

மூத்த பத்திரிகையாளர் சீ. ஏ சந்ரபிரேமயினால் எழுதப்பட்ட ‘கோட்டாஸ் வோர்’ எனும் முப்பது வருட கால புலிகளின் யுத்தத்தை சித்தரிப்பதான புத்தகம் தொடர்பான நிகழ்விலயே பாதுகாப்புச் செயலாளர் மேற்கண்டவாரு தெரிவித்தார்.

இலங்கையைப் பற்றிய தவறான அபிப்பிராயங்களை சர்வதேசத்துக்கு தெளிவு படுத்தும் வகையில் அமையும் இவ்வாறான நிகழ்வுகளின் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

யுத்தத்தின் பின்னர் நாட்டின் எப்பகுதிக்கும் அச்சமின்றி சென்றுவரக்கூடிய சூழலை அதிமேதகு ஜனாதிபதியின் தலைமத்து வத்தின்கீழ் உருவாகியிருப்பதை அவர் விபரித்தார்.அரசினால் மேற்காள்ளப்பட்ட நிலக் கண்ணி வெடிகளை அகற்றுதல், இடம் பெயர்ந்த மக்களுக்கான மீள் குடியேற்ற நடவடிக்கைகள், முன்னால் புலிபோராளிகளுக்கான வீட்டுத்திட்டம், மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களை அவர் விபரித்தார். இந்நிகழ்வில் செரண்டிப் கோஸ்ட் பெஸ்டிவலின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பெரும் திரளான உள்ளூர் வெளியூர் ஆர்வளர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். 

No comments:

Post a Comment