Saturday, March 02, 2013
இலங்கை::வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் வகையில் தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த முயற்சிகளுக்கு ஒரு போதும் இடமளிக்கப்படாது என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழ்த்தேசியக் (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்த வெளியிட்டுவருக்கின்ற அறிக்கை தமக்கு கவலைத் தருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடக்கிலிருந்து முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றிய போது இவரும் ஒரு ஆயுதக் குழுவின் உறுப்பினராக இருந்தார்.
இவர்களால் வெளியேற்றப்பட்ட ஒரு இலட்சம் முஸ்லிம்களும் பட்ட துன்பங்களும்,துயரங்களும்,கஷ்டங்களும் இன்னும் தீராத நிலையிலும்,இந்த 22 வது ஆண்டிலும் பொறுமையாக இருந்துவருகின்றோம்.
தற்போதைய சமாதான சூழலையடுத்து தமது சொந்த மண்ணுக்கு முஸ்லிம்கள் மீளக் குடியமர வருகின்ற பொழுது அதெற்கெதிராக செயற்படுவதை இனியும் பார்த்துக் கொண்டு பொறுமை காக்க முடியாது.
முஸ்லிம்கள் வேதனையடைந்துள்ளனர்
வடக்கில் இந்திய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற இந்திய வீடமைப்பு திட்டத்தில் வடமாகாண முஸ்லிம்கள் உள்ளடக்கப்பட கூடாது என்று கூறி அவரே தலைமை தாங்கி ஆரப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்து நடத்தினார்.
அதே போல் வடக்கில் முஸ்லிம்கள் மீள்குடியேறுகின்றார்கள்,அவர்கள் வாழாத இடங்களில் மீள்குடியமர்த்தப்படுகின்றார்கள் என்ற அப்பட்டமான பொய்ப் பிரச்சாரங்களை உள்ளுர் மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு பிழையான செய்திகளை வழங்கி அதன் மூலம் பிரசாரங்களை செய்து வருகின்றார்.இவ்வாறான பொய் பிரசாரங்களால் வடமாகாண முஸ்லிம்கள் மிகவும் வேதனையடைந்துள்ளனர்.
சந்தேகம் இருக்கின்றதா?
இவ்வாறான பிரசாரங்களை அவர் நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளவிரும்புகின்றேன்.
(புலி)கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் அதனை பேசி விளங்க வைக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.இல்லாத விடத்து அவர் முஸ்லிம் மத தலைவர்களுடன்,கிராம,பிரதேச செயலளார்கள் மற்றும் அரசாங்க அதிபருடன் கேட்டு தெளிவை பெறவேண்டும்.
இனவாத யுத்தத்தை ஆரம்பிக்கும் முயற்சி
உறங்குவது போன்ற பாசாங்கு செய்யும் நபரை எழுப்ப முடியாது என்ற பழமொழிக்கு ஒப்பவே நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் அறிக்கைகளை நாம் காண்கின்றோம்.
வங்குரோத்து நிலையில் உள்ள தமது அரசியலை இருப்புக்கு முட்டுக் கொடுத்து அதிலிருந்து அரசிலை செய்யலாம் என்ற நப்பாசையில் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத சிந்தனையினை கக்கிகொண்ட இருப்பது மட்டுமல்லாமல்,இன உறவை பேணி வாழந்து வரும் இரு சமூகங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தி,மற்றுமொரு இனவாத யுத்தத்தை ஆரம்பிக்கும் அநியாயத்தையும் இவர் செய்து வருவதானது,சமாதானத்தையும்,ஒற்றுமையினையும் வேண்டி நிற்கும் மக்களுக்கு பேரிடியாக அமையும். இவ்வாறான செயலை அவர் நிறுத்த வேண்டும்.
நிரூபிக்க முடியுமா?
வவுனியா மாவட்டத்தில் முஸ்லிம்கள் வாழாத எந்த கிராமத்தில் முஸ்லிம்கள் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள்,அதே போல் அவர்களுக்கு எங்கு காணிகள் அத்துமீறி வழங்கப்படுகின்றது என்பதை அவரால் நிரூபிக்க முடியுமா என கேட்கவிரும்புகின்றேன்.
அதே போல் முல்லைத்தீவு மாவட்டத்தில் பத்து கிராமங்களில் முஸ்லிம்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகளும்,பதிவுகளும் அரசாங்க அதிபர் பணிமனையில் உள்ளது. அரசாங்க அதிபர் அவர்கள் முழுமையான காணி விபரங்களை ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.இது பகிரங்கப்படுத்தப்பட்டிருக்கின்ற போதும்,அப்பாவி தமிழ் மக்களை ஏமாற்றி,பொய் கூறி அவர்களுக்கு கிடைக்கும் உதவிகளை பெற விடாமல் தடுக்கும் அநியாயத்தை செய்வதிலிருந்து அவர் விலக்கிக் கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களின் வாழ்விடங்கள் தமிழர்களின் வாழ்விடங்களாக மாறியுள்ளன
அதே போல் மன்னார் மாவட்டத்திலும் முஸ்லிம்கள் வாழந்த பல கிராமங்கள் இன்று தமிழ் மக்களின் வாழ்விடமாகமாறியுள்ளன.அதற்காக வேண்டி அந்த சகோதர தமிழ் மக்களை நாம் அங்கிருந்து வெளியேற்றவோ,அல்லது அவர்களுக்கு எதிராகவோ எந்த ஆர்ப்பாட்டங்களையும் செய்யவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
முஸ்லிம்களின் காணிகளையும் கடற்படையினர் பாவனைக்கு எடுத்துள்ளனர்.இதனால் முஸ்லிம்களும் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.20 வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம்கள் தமது மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதன் பிறகு 2005 ஆம் ஆண்டளவில் காணி உறுதிகள் வழங்கப்பட்ட போது,முஸ்லிம்களுக்கு அது வழங்கப்படவில்லை.அக்காலத்தில் 80 ஆயிரம் தமிழ் மக்களுக்கு வடமாகாண சபை ஊடாக காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.குறிப்பாக முஸ்லிம்கள் வாழ்ந்த பல கிராமங்கள் புதிய தமிழ் கிராமங்களாக மாறியுள்ளன.அதனை நாங்கள் விமர்சிக்க வில்லை.எமது மக்களும் வாழ்வதற்கு இடம் தாருங்கள் என்று தான் அதிகாரிகளிடத்திலும்,அரசாங்கத்திடத்திலும் கோரிக்கைவிடுத்துவருகின்றோம்.
முஸ்லிம்கள் எட்டு மாகாணங்களில் செறிந்து வாழ்கின்றனர்
ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் விடயங்களை தெரிந்து கொண்டும்,பழைய அவர்களது செயற்பாடுகளை மறந்த நிலையிலும்,வேறு மாட்ட மக்கள் புதிதாக வடமாகாணத்தில் வந்து குடியேறுகின்றார்கள் என்ற பிழையான,பொய்களை கிழப்பிவிட்டுள்ளார்.
முஸ்லிம்கள் எட்டு மாகாணங்களில் செறிந்து வாழ்கின்றனர். தான் வாழ்ந்த பிரதேசங்களை கைவிட்டு விட்டு இங்கு வந்து குடியேறுவதற்கு அவர்களுக்கு எவ்வித தேவையும் இல்லை என்பதை சொல்லி வைக்கவிரும்புகின்றேன்.
வடமகாண முஸ்லிம்களின் தாயக பூமி வடமகாணம் என்பதால் இங்கிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் இங்கு வந்து குடியேற வேண்டும்,அதற்காக வெளி மாவட்டத்தை சேர்ந்த எந்தவொரு நபரையும் நானோ,எமது தலைமைத்துவமோ செய்யவுமில்லை,செய்யப் போவதுமில்லை எவர் அதனை செய்வாராக இருந்தால் அதற்கெதிராக நடவடிக்கையெடுக்கவும் அஞ்சப் போவதுமில்லை என்பதை என்றும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment