Saturday, March 02, 2013
இலங்கை::யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை எவ்வாறு முறியடிப்பது என்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு தெளிவான திட்டம் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்குலக நாடுகளின் குற்றச்சாட்டுக்களை முறியடிப்பதற்கு அரசாங்கம் தந்திரோபயங்களை பின்பற்ற வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்திற்கு இந்த விடயங்கள் குறித்து அக்கறையில்லை என்றால் ஏன் தாம் மட்டும் உரக்கக் குரல் கொடுக்க வேண்டுமென அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கைக்கு எதிரான நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தேச விரோத சக்திகள் இயங்கி வருகின்றன எனவும் அதனை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவின் நடவடிக்கைகளினால் நாட்டின் பொருளாதார நிலைமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment