Saturday, March 2, 2013

நவனீதம்பிள்ளையின் இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நியாயமற்றவை – ஜெர்மனி!

Saturday, March 02, 2013
ஜெனீவா::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நியாயமற்றவை என ஜெர்மனி சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான ஜெனீவா நிரந்தரப் பிரதிநிதி எச்.சுமார்க்கர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 22ம் அமர்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நியாயமற்ற முறையில் இலங்கையை இலக்கு வைத்து நவனீதம்பிள்ளை குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment