Friday, March 29, 2013

யாழ்ப்பாணத்தில் மேலும் பாரிய சவால்கள் காணப்படுவதாக பிரித்தானியாவின் பொதுநலவாய மற்றும் வெளிவிவகார பணிப்பாளர் நெய்ல் க்ரொம்டன் தெரிவித்துள்ளார்

Friday, March 29, 2013
இலங்கை::யாழ்ப்பாணத்தில் மேலும் பாரிய சவால்கள் காணப்படுவதாக பிரித்தானியாவின் பொதுநலவாய மற்றும் வெளிவிவகார பணிப்பாளர் நெய்ல் க்ரொம்டன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த அவர் நேற்று கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் ஊடாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை மீளமைக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக நிலக்கண்ணி வெடி அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பிரித்தானியாவின் உதவியுடன் இடம்பெறுகின்றன.

இதனை பார்வையிட சென்று திரும்பிய நிலையிலேயே நெயில் தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாண காணிகளை பழைய நிலைமைக்கு கொண்டு வருவதில் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

போரினால் யாழ்ப்பாண மக்களுக்கு ஏற்பட்ட காயங்களை போக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

நெயில் க்ரொம்டன் தமது யாழ்ப்பாண விஜயத்தின் போது, யாழ்ப்பாண இராணுவ கட்டளைத் தளபதி மற்றும் வடமாகாண ஆளுநர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.

No comments:

Post a Comment