Friday, March 29, 2013
சென்னை::இலங்கையில் நடத்த திட்டமிட்டுள்ள காமன்வெல்த் மாநாட்டை வேறு ஏதாவது நாட்டில் நடத்த இந்தியா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், காமன்வெல்த் தலைவராக ராஜபட்ச இருப்பதை அனுமதிக்கக்கூடாது என்று கூறினார். எனவே, இந்தியா இதில் தலையிட்டு, காமன்வெல்த் மாநாட்டை வேறு நாட்டில் நடத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
காங்கிரஸ் கட்சியை தனிமைப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுகின்றன என்று ஜி.கே.வாசன் தெரிவிதுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சிகளும் தனிமைப் படுத்தும் முயற்சிகளும் நடக்கிறது. அதன் வெளிபாடுதான் சில அடிப்படையற்ற செய்திகள் வெளிவருவது. இந்த மாதிரியான தகவல்கள் அடிப்படையற்ற ஆதரமற்ற செய்திகள் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். உண்மைக்கு புறம்பான செய்திகளுக்கும் தகவல்களுக்கும் நான் பதில் சொல்ல விரும்ப வில்லை. கற்பனையாகவும் யூகங்களின் அடிப்படையிலும் வரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். இதன் தொடர்ச்சியாகத் தான் இயக்கத்தை பலவீனப் படுத்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு தவறான தகவல்களை பரப்பு வோர்களை அனுமதிக்க மாட்டேன். தவறான செயல்களில் ஈடுபடுவது ஏற்புடையது அல்ல. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்புவோர் மீது தமிழக காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்.
இலங்கை தமிழர்களின் நலனுக்காகவும் அவர்களின் உரிமைக்காகவும் அறப் போராட்டம் நடத்தும் மாணவர்களின் உணர்வு களை மதிக்கிறோம். மாணவர்களின் போராட்டம் தமிழக மக்கள் மத்தியில் மட்டுமல்ல அகில இந்திய அளவிலும் விழிப்புணர்வை ஏற்படுத் தியுள்ளது. மாணவர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் கட்சி முன்னின்று செயல்படும். அவர்களின் உணர்வுகளை அழுத்தமாக மத்திய அரசிடம் பிரதிபலிப்பேன்.
இலங்கையில் வாழும் தமிழர்கள் பாதுகாப்பும் சம உரிமையும் பெற்று வாழும் நல்ல சூழ்நிலையை மத்திய அரசு உருவாக்கி தரும்.மாணவர்கள் போராட்டத்தை திசை திருப்பி தகாத விளைவு களை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள். அதற்கு மாணவர்கள் இடமளித்து விடக்கூடாது. தங்கள் போராட்டத்துக்கு களங்கம் ஏற்பட மாணவர்கள் யாரையும் அனுமதிக்க கூடாது. இனிவரும் நாட்கள் தேர்வு நேரம். எனவே மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.
இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கும் அவர்களின் நலனுக்கும் மத்திய அரசு எடுத்து வரும் ஆக்கப்பூர்வமான முயற்சிகளுக்கு மாணவர்கள் துணை நிற்க வேண்டும். மாணவர்களின் எண்ணங்கள் விரைவாக நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். விளையாட்டுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லாவிட்டாலும் தமிழக மக்களின் உணர்வுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கும் கட்டாயத்தில் உள்ளோம்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாட மாட்டார்கள் என்று ஆட்சி மன்றக்குழு எடுத்திருக்கும் நல்ல முடிவை வரவேற்கிறேன். கொழும்பில் வருகிற நவம்பர் மாதம் காமன்வெல்த் நாடுகளின் மாநாடு நடக்க உள்ளது. இதில் எனது தனிப்பட்ட கருத்து என்னவெனில் இலங்கை அரசின் அணுகு முறையில் வரும் நாட்களில் மாற்றம் ஏற்படாவிட்டால் வேறு நாட்டில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தும் முன் முயற்சியை இந்தியா எடுக்க வேண்டும். இந்திய அரசின் நிலைப்பாட்டை இலங்கை அரசு சரியாக புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை மீது கொண்டு வரப்பட்ட கண்டன தீர்மானத்தை இந்தியா 2-வது முறையாக ஆதரித்து ஓட்டளித்துள்ளது. இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பும், சம உரிமையும் கிடைக்க வேண்டும் என்ற கருத்தோடு இந்தியாவின் வலுவான முடிவை ஆதரித்து 25 நாடுகள் துணை நின்றது. இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு இந்தியா பல கோடி மதிப்பில் உதவிகளை செய்து வருகிறது. ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் இலங்கையில் நிறைவேற்றப்பட்டு வரும் பணிகள் முறையாக நடக்கிறதா என்பதை 6 மாதத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கால நிர்ணய அடிப்படையில் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்யும் உரிமை அனைத்து நாடுகளுக்கும் உண்டு. இதில் இந்தியாவுக்கு பெரும் பங்கு இருக்கிறது. எனவே இந்தியாவின் ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு எல்லோரும் துணை நிற்க வேண்டும். இலங்கைக்கு எதிரான தீர்மானம் நீர்த்துப்போக இந்தியாதான் காரணம் என்று சொல்வதை ஏற்க முடியாது. அது உண்மையும் அல்ல தீர்மானத்தின் எந்த வாசகத்தையாவது மாற்றியதாக ஆதாரப்பூர் வமாக சொல்ல முடியுமாப மேலும் முக்கியமாக தனிப்பட்ட நாடாக தீர்மானத்தை திருத்தவோ, மாற்றவோ இந்தியாவுக்கு அதிகாரம் கிடையாது. ஆரம்பம் முதல் இறுதி வரை மற்ற நாடுகளுடன் இணைந்து சிறப்பாக முயற்சி எடுத்து நிறைவேற்றி உள்ளது. மற்ற நாடுகளும் தார்மீக முறையில் ஆதரவு கொடுத்துள்ளன.
தமிழ் ஈழத்துக்காக பொதுவாக் கெடுப்பு நடத்த வேண்டும் என்று இந்தியா தீர்மானம் முன்வைக்குமா என்கிறீர்கள். பாராளுமன்ற கூட்டத்தின் இறுதி வாரத்தில் இலங்கை இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சி முன் மொழிந்த தீர்மானம் அனைத்து கட்சி கூட்டத்தில் ஆதரவு இல்லாமல் நிறை வேற்ற முடியவில்லை என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
தமிழ் ஈழம் தொடர்பாக பல்வேறு கட்சிகள் அவரவர் இயக்க உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள். சட்ட சபையிலும் அந்த உணர்வை பிரதிபலித்து உள்ளார்கள். காங்கிரஸ் கட்சி தேசிய கட்சி சர்வதேச அளவில் இந்தியா எடுக்கும் முடிவுகளைத்தான் பிரதிபலிக்க முடியும். டெல்லியில் உள்ள இலங்கை தூதர் கரியவாசம் தனது தகுதியின் அடிப்படையில் பேச வேண்டும்.
தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும் போது தாக்கப்படுவது வருத்தம் அளிக்கிறது. இந்த செயல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். ஆனால் இன்னும் முழுமை பெறவில்லை என்பது உண்மைதான். மத்திய அரசு தமிழகத்தை பாரபட்சமாக நடத்துவதாக கூறுவது தவறு. தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து உதவிகரமாக உள்ளது. இருப்பினும் மண்எண்ணை அளவு குறைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது பற்றி பேசி முயற்சிப்போம்.
அமெரிக்கா தீர்மானம் நீர்த்து போவதற்கு இந்தியா காரணம் என கூறுவது தவறு. தமிழக மக்களின் பிரதிபலிப்பை பிரதமரிடம் தெரிவித்துள்ளேன்.
No comments:
Post a Comment