Friday, March 29, 2013

கோட்டைக்கல்லாறில் வேனின் வெறியாட்டம்; அப்பாவிகள் மூவர் பலி!



Friday, March 29, 2013
இலங்கை::களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு புத்தடி நாகதம்பிரான் ஆலயத்திற்கு முன்பாக இன்று காலை 07.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர்.

திருமலையில் இருந்து அம்பாறை தேசத்திற்கு மகுடம் கண்காட்சிக்காக சென்று கொண்டிருந்த வான் ஒன்று வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் மோதி பின் மின் கம்பம் ஒன்றில் மோதியுள்ளது. அதன் பின்னர் துவிச்சக்கர வண்டியிலும் மோதியுள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த நபரும் துவிச்சக்கர வண்டியில் பயணித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.

வே.பரமானந்தம் (50 வயது), ஈ.திலீபன் (32 வயது), ரவீந்திரன் (31 வயது) ஆகியோரே பலியாகியுள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment