Friday, March 01, 2013
இலங்கை::இந்த வருடத்தில், 3 மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கே ஹலியரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம் பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
எனினும், 2014 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலோ அல்லது வேறு எந்த தேர்தலோ நடைபெறாது எனவும் அமைச்சர் ஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மனித உரிமை கண்காணிப்பகத்தின் அறிக்கை முன்கூட்டியே கிடைக்கப் பெற்றது என அரசாங்கம் தெரிவித்துள்ளது!
மனித உரிமை கண்காணிப்பகத்தின் அறிக்கை முன்கூட்டியே கிடைக்கப் பெற்றது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. மனித உரிமைக் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய அறிக்கை ஊடகங்களில் வெளியிடப்படுவதற்கு முன்னதாகவே கிடைத்ததாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
குறித்த அறிக்கையின் பிரதியொன்று கடந்த 22ம் திகதியே தமக்குக் கிடைக்கப் பெற்றதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையில் இராணுவத்தினர் தமிழ் கைதிகள் மீது பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டதாகவும், இது தொடர்பான 75 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் போலியானவை, இந்த குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க எவ்வித சான்றுகளும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மிகவும் பொறுப்புடன் இந்தக் கருத்தை வெளியிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment