Friday, March 01, 2013
சென்னை::ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டின் போது, அமெரிக்காவினால் முன்வைக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான பிரேரணை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு இன்னும் உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தப்படவில்லை.
ஒரு சிறந்த காரணத்துக்காக இந்தியா தொடர்ந்தும் அமைதி காத்து வருவதாக த டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சில விடயங்கள், இந்தியாவினால் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை என்று, இந்திய அரசாங்கத்தின் தகவல்களை மேற்காள்காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்விளைவாகவே திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போன்றவற்றின் அழுத்தங்களின் மத்தியிலும், தமது நிலைப்பாட்டை இந்தியா இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்காதுள்ளது.
ஏற்கனவே பிரதமர் அலுவலக அமைச்சர் கே.நாராயணசாமி, இந்தியா அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று அறிவித்திருந்த போதும், அது இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இலங்கை, தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகளுக்கு அதிக அதிகாரத்தை வழங்க வேண்டும் என்று, இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும் என்று இந்திய மத்திய அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment