Thursday, February 28, 2013

பாலச்சந்திரனா? பாலச்சந்திரன்களா?


Thursday, February 28, 2013
இலங்கை::சனல் 4 தனது அடுத்த திரைப்படத்தை வெளியிட்டுள்ளது. கதாபாத்திரம் பயங்கரவாதி பிரபாகரனின் புத்திரன்.கதைச்சுருக்கம் சரணடைந்த பாலச்சந்திரனை இராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை. அதேவேளை அனுதாபப்படவுமில்லை. பிரபாகரன் இறந்தது இலங்கை வாழ் மக்களுக்கு மகிழ்ச்சியான விடயம்.30 வருடங்களாக நாட்டில் பேரழிவுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டால் பாதிக்கப்பட்டவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்தானே. பின்லாடன் என்ற அல்கைதா பயங்கரவாதி கொல்லப்பட்டபோது அமெரிக்கர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடவில்லையா? அது போல பிரபாகரன் கொல்லப்பட்டதும் மகிழ்ச்சியான விடயமே! இப்போது பாலச்சந்திரன் கொல்லப்பட்டதற்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் சிலர் கொதிப்படைந்துள்ளார்கள். பாலச்சந்திரன் கொல்லப்பட்டதற்கு பிரபாகரனே காரணம். பிரபாகரனின் சந்ததி அழிக்கப்பட்டது எதிர்காலத்தில் தமிழர்களுக்கு நன்மையாகக் கருதலாம். புலிகள் பல சிறுவர்களை கட்டாயமாகப் பிடித்துச்சென்று யுத்தத்திற்கு பலி கொடுத்தபோது இவர்கள் கண்கள் திறக்கவில்லை. வன்னியில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உடல் சிதறி இறந்தார்கள். அவர்கள் இறக்கப் போகிறார்கள் என்று இந்தப் புலம்பெயர் அறிவிலிகளுக்குத் தெரியாதா? வன்னியில் குழந்தைகள் உடல் சிதறி இறந்தபோது தாய்மார்களின் கூக்குரல்கள் பிரபாகரனின் காதுகளில் விழவில்லை. மக்களை வெளியில் விடும்படி புலம்பெயர் அறிவிலிகள் பிரபாகரனிடம் வேண்டுகோள் விடவில்லை. பிரபாகரனின் பிடியிலிருந்து தப்பியோடியவர்கள் குழந்தைகள் உட்பட புலிகளால் கொல்லப்பட்டார்கள். அப்போதும் புலம் பெயர் அறிவிலிகளின் கண்கள் திறக்கவில்லை. மினிபஸ்சிற்குள் வைத்து காயப்பட்டவர்கள், ஊனமுற்றவர்களை புலிகள் குண்டுவைத்து குண்டுவைத்து கொன்றது சாட்சிகளுடன் நிரூபித்தும் புலம்பெயர் அறிவிலிகளின் கண்கள் திறக்கவில்லை.

இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் புலிகள் திட்டமிட்டு குழந்தைகள் உட்பட குடும்பங்களைக் கொன்றபோது யாருடைய கண்களும் திறக்கவில்லை. மன்னார் வங்காலையில் ஒரு குடும்பத்தைக் கொன்று அவர்களை கயிற்றில் தொங்கவிட்டபோது கொலைப் பழியை இராணுவத்தினர் மீதே சுமத்தினார்கள். அதே போல அல்லைப்பிட்டியிலும்,கனகம்புளியடியிலும் புலிகள் தங்கள் வழக்கமான நரித்தனமான முறையில் குடும்பங்களைக் கொன்று பழியை இராணுவத்தினர்மீதே சுமத்தினார்கள். புலிகளின் கொலைகளை திசை திருப்ப புலிகளின் ஊடகங்கள் உதவி புரிந்தன. புலிகளின் கண்ணி வெடிகளிகளில் சிக்கி குழந்தைகள் இறந்தபோது இந்த அறிவிலிகள் கண்களை மூடிக்கொண்டிருந்தார்கள். எத்தனையோ பாலகர்கள் கொல்லப்பட்டபோது கண் திறக்காத இந்த அறிவிலிகள், அந்தப் பாலகர்களின் அழிப்பிற்கு காரணமான பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனுக்காக மட்டும் எதற்கு கண்ணீர் வடிக்கிறார்கள்?

No comments:

Post a Comment