Saturday, March 2, 2013

பினாகா ராக்கெட் லாஞ்சர் 2ம் நாளாக வெற்றிகர சோதனை!

Saturday, March 02, 2013
பாலசூர்::ராணுவத்தில் பீரங்கிக்கு மாற்றாக பயன்படுத்த, பினாகா என்ற பல அடுக்கு ராக்கெட் லாஞ்சர் உருவாக்கப்பட்டது. இந்த லாஞ்சர் மூலம் 44 நொடிகளுக்குள் 12 ராக்கெட் குண்டுகளை ஏவ முடியும். 40 கி.மீ தூரம் சென்றும் தாக்கும் இந்த ராக்கெட் குண்டுகள் 3.9 சதுர கி.மீ இடத்தில் உள்ள கட்டிடங்கள் மற்றும் பதுங்கு குழிகளை அழிக்கும் சக்தி பெற்றவை. ராணுவத்தில் ஏற்கனவே சேர்க்கப்பட்ட பினாகா ராக்கெட் லாஞ்சர் சோதனை கடந்த 1995ம் ஆண்டு முதல் அவ்வப்போது நடந்து வருகிறது. பினாகா ராக்கெட் லாஞ்சர் சோதனை கடந்த ஜனவரி மாதம் 30, 31ம் தேதிகளில் ஒடிசாவில் நடந்தது. அப்போது 7 ராக்கெட் குண்டுகள் ஏவப்பட்டன. அவைகள் வெற்றிகரமாக இலக்கை தாக்கின. இந்நிலையில் சண்டிப்பூரில் கடந்த இரண்டு நாட்களாக பினாகா சோதனை மீண்டும் நடைபெற்றது. நேற்று முன்தினம் 3 ராக்கெட் குண்டுகளும், நேற்று 3 ராக்கெட் குண்டுகளும் ஏவப்பட்டன. அவைகள் வெற்றிகரமாக இலக்கை தாக்கின.

No comments:

Post a Comment