Saturday, March 2, 2013

ஜெனீவாவில் (புலிகளின்) ஆதரவு செனல் 4 தொலைக்காட்சியின் மோதல் தவிர்ப்பு வலயம் காணொளி திரையிடப்பட்டது!

Saturday, March 02, 2013
இலங்கை::ஜெனீவாவில் (புலிகளின்) ஆதரவு செனல் 4 தொலைக்காட்சியின் மோதல் தவிர்ப்பு வலயம் காணொளி திரையிடப்பட்டது!

 (புலிகளின்) ஆதரவு செனல் 4 தொலைக்காட்சியின் மோதல் தவிர்ப்பு வலயம் - இலங்கையின் கொலைக்களத்தின் மூன்றாம் பாகம் காணொளி நேற்றைய தினம் மனித உரிமைகள் ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் சபையில் திரையிடப்பட்டது.

சர்வதேச மன்னிப்பு சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்பன இணைந்து இதனை திரையிடுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது.

முன்னதாக இந்த காணொளியை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் திரையிட இலங்கை எதிர்ப்பை வெளியிட்டு வந்தது.

எனினும் இந்த எதிர்ப்பு கருத்தில் கொள்ளப்படாமல், குறித்த காணொளி திரையிடப்பட்டமை தொடர்பில், ஜெனீவாவில் உள்ள இலங்கை தூதுவர் ரவீநாத் ஆரியசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அவர் இதற்கு எதிராக கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளதுடன், அதில் சர்வதேச மன்னிப்பு சபைக்கு ஐக்கிய நாடுகள் சபையில் வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமை நீக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.

இதற்கிடையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்பில் இலங்கை முன்வைக்கின்ற விமர்சனங்களுக்கு, ஜேர்மன் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் நடைபெறுகின்ற 22வது மனித உரிமைகள் மாநாட்டில் உரையாற்றிய ஜெர்மனியின் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர், ஹேன்ஸ் சூமேக்கர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள் நிலவரங்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதன்பிள்ளை முன்வைத்த கருத்துக்கள் குறித்து, இலங்கையின் பிரதிநிதி அமைச்சர் மகிந்தசமரசிங்க முன்வைத்த குற்றச்சாட்டுகளை அவர் கண்டித்துள்ளார்

No comments:

Post a Comment