Saturday, March 02, 2013
வாஷிங்டன்::ஐ.நா மனித உரிமை மீறல் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா போன்ற நாடுகள் ஆதரிக்கும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற வெளியுறவு கூட்டத்தில் பேசிய அமெரிக்க அரசுத் துறை துணை செயலாளர் ராபர்ட் பிளேக் இதனை தெரிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதில் இலங்கை அரசு மெத்தனமாக செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கையில், வடக்கு மகாணத்தின் தேர்தலை தள்ளிப் போடுவது, தமிழ் தேசிய கூட்டமைப்பு உடனான அரசின் அதிகார பகிர்வு குறித்த பேச்சுவார்த்தைகள் முழுமையடையாதது போன்றவைகள் கவலை அளிப்பதாக அவர் கூறியுள்ளார். 13வது சட்டத் திருத்தம், தலைமை நீதிபதி, போன்ற விவகாரத்தில் ஜனநாயகம் பின்நோக்கிச் செல்லும் தோற்றத்தை உருவாகியுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுபோன்ற காரணங்களால் இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை மீறல் ஆணைத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா போன்ற நாடுகள் ஆதரிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். இலங்கை விவகாரத்தில் 6 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் தமக்கு உள்ளதாகவும், இறுதிப் போரின் நிகழ்வுகள் பல்வேறு கேள்விகளை எழுப்புவதாகவும் ராபர்ட் பிளேக் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment