Wednesday, February 27, 2013

புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் உரிய கவனம் செலுத்தத் தவறியுள்ளது - சுதர்சனி பெர்னாண்டோ புள்ளோ!

Wednesday, February 27, 2013
இலங்கை::புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் உரிய கவனம் செலுத்தத் தவறியுள்ளதாக ஆளும் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சனி பெர்னாண்டோ புள்ளோ மற்றும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் ஸ்ரீமா திஸாநாயக்க ஆகியோர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் ஏனைய சர்வதேச நாடுகள்  புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை மறந்து விட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர். சர்வதேச சமூகத்தின் இரட்டை நிலைப்பாடு வருத்தமளிப்பதாக ஸ்ரீமா திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கணவர் காமினி திசாநாயக்க கொலை செய்யப்பட்டமை மற்றும் ஏனைய பொதுமக்கள் கொலை செய்யப்பட்டமை குறித்து சர்வதேச சமூகம் உரிய கவனம் செலுத்தத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்த பொதுமக்கள் தொடர்பில் மட்டுமே சர்வதேச சமூகம் கவலை கொண்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

புலிகள் தனது கணவர் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்களை கவனத்திற் கொள்ளாது குற்றச்சாட்டுக்களை மட்டும் சில தரப்பினர் முன்வைத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றம் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் எந்தத் தரப்பினரும் கவலை கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment